தேர்தல் 2024

“ஸ்கிரிப்ட் வைத்து பேசுபவன் நான் அல்ல” : எடப்பாடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலடி!

நாம் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் கொரோனா காலத்தில் கோவிட் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஒரே அரசு தமிழ்நாடு அரசு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 “ஸ்கிரிப்ட் வைத்து பேசுபவன் நான் அல்ல” : எடப்பாடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து குடியாத்தம் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது கூடி இருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்களுடைய எழுச்சியும் ஆர்வத்தையும் பார்க்கும் போது உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் வேட்பாளர் கதிர் ஆனந்தை பெறுவாரியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் 2019 ஆம் ஆண்டு கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்தபோது முதல் முறையாக வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். 2019 மக்களவைத் தேர்தலில் கதிர் ஆனந்தை வெறும் 8000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை கடந்த முறைக்கும் சேர்த்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 “ஸ்கிரிப்ட் வைத்து பேசுபவன் நான் அல்ல” : எடப்பாடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலடி!

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது நாம் நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்டர். நாம் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதியை அனைத்தும் நிறைவேற்றியுள்ளோம். அதில் 4 திட்டங்களை சுருக்கமாக தெரிவித்த அவர் கட்டணம் இல்லா பேருந்தின் மூலம் 483 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர். இதனால் மாதம் ரூபாய் 800 முதல் 900 முறை பெண்கள் சேமித்து வருகின்றனர்.

காலை உணவு திட்டம் 18 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் 1 கோடியே 16 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் சில சில குறைபாடுகள் இருந்தாலும் தேர்தல் முடிந்த பிறகு அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார். புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக ஏராளமான பெண் பிள்ளைகள் கல்லூரியில் சேர்ந்து வருகின்றனர்.

நாம் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் கொரோனா காலத்தில் கோவிட் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஒரே அரசு தமிழ்நாடு அரசு. கோவையில் கோவிட் பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை நேரில் சந்தித்த ஒரே முதலமைச்சர் நம் தமிழ்நாடு முதலமைச்சர் தான் என்றார்.

 “ஸ்கிரிப்ட் வைத்து பேசுபவன் நான் அல்ல” : எடப்பாடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலடி!

எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்கிரிப்ட் மாற்றி பேச வேண்டும் என தெரிவித்தார். நானாவது கல்லை காமித்தேன் இங்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் போது ஒருவர் பல்லை காட்டிக் கொண்டிருக்கிறார் பாருங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி நரேந்திர மோடியுடன் எடுத்த புகைப்படத்தை காண்பித்தார். உங்களைப்போல் நேரத்தை தகுந்தது போல் ஆளைத் தகுந்தார் போல் ஸ்கிரிப்ட் வைத்து பேசுபவன் நான் அல்ல என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளித்தார். கடந்த 9 வருடத்தில் அனைத்து மாநில உரிமைகளையும் இழந்துள்ளோம்.

முக்கியமாக மொழியுரிமை. மோடி பத்து நாள் மட்டுமல்ல தமிழ்நாட்டிலேயே தங்கியிருந்தாலும் கூட ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாது என தெரிவித்தார். தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் வந்தது அப்போதெல்லாம் மோடி எட்டிப் பார்க்கவில்லை. அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிதி அளித்தார். ஒன்றிய அரசிடம் நிதி கேட்டதற்கு நிதி அமைச்சர் வந்து பார்வையிட்டு சென்றார் ஆனால் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

ஒன்றிய பாரத ஜனதா அரசின் ஊழல்களை பட்டியலிட்டு பேசிய அவர் சிஏஜி அமைப்பு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிடுவார்கள். ஒன்றிய அரசு செலவு செய்த கணக்கில் ஏழரை லட்சம் கோடி கணக்கில் இல்லாமல் உள்ளதாக தெரிவித்துள்ளது. துவாரகா சாலை திட்டத்தில் ஒரு கிலோமீட்டர் சாலை இடுவதற்கு 250 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். மருத்துவ காப்பீடு திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கொடுத்து உள்ளனர். இந்த 10 வருட ஆட்சியில் பாரதிய ஜனதா பல லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது.

 “ஸ்கிரிப்ட் வைத்து பேசுபவன் நான் அல்ல” : எடப்பாடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலடி!

இதற்கெல்லாம் பாடம் புகட்ட வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி உங்களுடைய வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அடுத்த 23 நாட்கள் இந்த பிரச்சாரத்தை மக்களிடம் வீடு வீடாக சென்று நீங்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இவர்களுக்கு எல்லாம் பாடம் புகட்ட ஜூன் மூன்றாம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள், ஜூன் நான்காம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள். அவரின் இந்த 100ம் ஆண்டு நூற்றாண்டு விழாவில் அவருக்கு தேர்தல் வெற்றியை பரிசாக நாம் எல்லோரும் கொடுப்போம் என்றார்.

வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி உங்களுடைய வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அடுத்த 23 நாட்கள் இந்த பிரச்சாரத்தை மக்களிடம் வீடு வீடாக சென்று நீங்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இவர்களுக்கு எல்லாம் பாடம் புகட்ட ஜூன் மூன்றாம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள், ஜூன் நான்காம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள். அவரின் இந்த 100ம் ஆண்டு நூற்றாண்டு விழாவில் அவருக்கு தேர்தல் வெற்றியை பரிசாக நாம் எல்லோரும் கொடுப்போம் என்றார்.

 “ஸ்கிரிப்ட் வைத்து பேசுபவன் நான் அல்ல” : எடப்பாடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலடி!
 “ஸ்கிரிப்ட் வைத்து பேசுபவன் நான் அல்ல” : எடப்பாடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலடி!
 “ஸ்கிரிப்ட் வைத்து பேசுபவன் நான் அல்ல” : எடப்பாடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலடி!
 “ஸ்கிரிப்ட் வைத்து பேசுபவன் நான் அல்ல” : எடப்பாடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலடி!
 “ஸ்கிரிப்ட் வைத்து பேசுபவன் நான் அல்ல” : எடப்பாடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலடி!
 “ஸ்கிரிப்ட் வைத்து பேசுபவன் நான் அல்ல” : எடப்பாடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலடி!
 “ஸ்கிரிப்ட் வைத்து பேசுபவன் நான் அல்ல” : எடப்பாடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலடி!
 “ஸ்கிரிப்ட் வைத்து பேசுபவன் நான் அல்ல” : எடப்பாடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலடி!
banner

Related Stories

Related Stories