தி.மு.க

“நீதி தவறிய பாண்டியனே.. உனக்கு செங்கோல் எதற்கு?” : முத்தமிழறிஞர் கலைஞரின் பொன்மொழிகள்! #KalaignarQuotes

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டின் தொடக்க நாள் இன்று. முத்தமிழறிஞர் கலைஞரின் பொன்மொழிகள் - சிறப்புத் தொகுப்பாக இங்கே...

* கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாதென்பதற்காக அல்ல. கோவில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாதென்பதற்காக!

“நீதி தவறிய பாண்டியனே.. உனக்கு செங்கோல் எதற்கு?” : முத்தமிழறிஞர் கலைஞரின் பொன்மொழிகள்! #KalaignarQuotes

* அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் ?

* நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே... உனக்கு செங்கோல் எதற்கு? மணிமுடி எதற்கு? வெண்கொற்றக் குடை எதற்கு?

* படிச்சவன் பட்டணத்துல போய் உட்கார்ந்துக்கிட்டு எதாச்சும் பதவி போஸ்ட்டுகள தேடிக்கிட்டு தன்னையும் ஒரு உயர்ந்த ஜாதிக்காரன் மாதிரி பாவ்லா பண்ணிக்கிறானே தவிர, அவனால இந்த சமுதாயத்துக்கு ஒரு செல்லாக்காசு பயன் கூட கிடையாது.

* வாழ்க்கையை ஒரு போராட்டம் என வர்ணிப்போர் உளர்!எனக்கோ போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது.

“நீதி தவறிய பாண்டியனே.. உனக்கு செங்கோல் எதற்கு?” : முத்தமிழறிஞர் கலைஞரின் பொன்மொழிகள்! #KalaignarQuotes

* எனக்கென்று ஒரு தனி வாழ்க்கை கிடையாது. ஒரு இலட்சியத்தை மையமாகக் கொண்டு சுழலும் இயக்கத்தின் வரலாற்றில் நான் ஒரு பகுதி.

* நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்!

* இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்!

* வீரன் ஒருமுறைதான் சாவான்; கோழை பலமுறை சாவான் என்பார்கள். ஒரு திருத்தம். வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை.

“நீதி தவறிய பாண்டியனே.. உனக்கு செங்கோல் எதற்கு?” : முத்தமிழறிஞர் கலைஞரின் பொன்மொழிகள்! #KalaignarQuotes

* ஆதிக்கம் செலுத்துகிற மொழி குயிலாகக் கூவி வந்தாலும்-மயிலாக ஆடி வந்தாலும் மயங்கிடோம். அன்னைத் தமிழ் காப்பதற்கு ஆவி தரவும் தயங்கிடோம்.

* மனச்சாட்சி உறங்கும் போது தானே மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.

* உலகத்திலேயே மலிவானது உபதேசம் ஒன்றுதான். உபதேசிகள் பலர் அதனை மலிவாக விற்றுவிட்டுத் தங்கள் கடையைக் காலியாக வைத்திருப்பார்கள்.

“நீதி தவறிய பாண்டியனே.. உனக்கு செங்கோல் எதற்கு?” : முத்தமிழறிஞர் கலைஞரின் பொன்மொழிகள்! #KalaignarQuotes

* பெரும்பான்மை, உடலைப் போன்றது.சிறுபான்மை, கண்களைப் போன்றது.உரிமைகள் அனைத்தும் பெரும்பான்மைக்குத்தான் என்று சொல்லி சிறுபான்மையினரைப் புறக்கணிப்பது;கண்களைக் குத்திக் கொள்கிற குருட்டுச் செயலாகும்.

* இசைக்கு மொழி இல்லை: ஆனால் மொழிக்கு இசை தேவை. அதனால்தான் தமிழிசை இயக்கம் தோன்றியது.

* நாம் - ஜனநாயகம்.

நான் - சர்வாதிகாரம்.

banner