தி.மு.க

தி.மு.கவில் இணைந்த தருமபுரி மாவட்ட பா.ம.க நிர்வாகிகள்!

பா.ம.க தருமபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சத்தியமூர்த்தி தனது ஆதரவாளர்களுடன் தி.மு.கவில் இணைந்தார்.

தி.மு.கவில் இணைந்த தருமபுரி மாவட்ட பா.ம.க நிர்வாகிகள்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தருமபுரி தொகுதி தி.மு.க எம்.பி டாக்டர் எஸ்.செந்தில்குமார் ஏற்பாட்டில் பா.ம.க சேர்ந்த தருமபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் அ.சத்தியமூர்த்தி தலைமையில் பா.ம.க.வைச் சேர்ந்த பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளரும் - ஒன்றிய கவுன்சிலருமான பெ.விஜயன், பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சி.வெங்கடேசன் - அரூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பீ. அன்பழகன் - பாப்பிரெட்டிப்பட்டி பேரூர்ச் செயலாளர் சபரி. லட்சுமணன் - பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் தலைவர் ராஜிகண்ணு - அரூர் பேரூர்ச் செயலாளர் கி.அய்யப்பன் உள்ளிட்ட பா.ம.க.வைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தருமபுரி தொகுதி கழக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் ஏற்பாட்டில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று மாலை, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தருமபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் அ.சத்தியமூர்த்தி தலைமையில் பா.ம.க நிர்வாகிகள் தங்களை தி.மு.கவில் இணைத்துக்கொண்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளரும் - ஒன்றிய கவுன்சிலருமான பெ.விஜயன், பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சி.வெங்கடேசன் - அரூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பீ. அன்பழகன் - பாப்பிரெட்டிப்பட்டி பேரூர்ச் செயலாளர் சபரி. லட்சுமணன் - பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் தலைவர் ராஜிகண்ணு - அரூர் பேரூர்ச் செயலாளர் கி.அய்யப்பன் - சமூகநீதி பேரவை தருமபுரி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜெ.அருணகிரி, அதிகாரப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமார், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் சு.வெங்கடேஷ், பசுமை தாயக பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியச் செயலாளர் சண்முகம், தருமபுரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் வே.முருகேசன், மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் ம.ராஜேஷ், மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் கி.தினேஷ், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜ.ஏங்கல்ஸ், மாவட்ட துணைச் செயலாளர் கடத்தூர் இராமமூர்த்தி, தருமபுரி மாவட்ட ஊடக பேரவை தலைவர் ம.ஸ்டாலின் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய துணைத் தலைவர் சத்தியராஜ், மாவட்ட வன்னியர் சங்க துணைத் தலைவர் கடத்தூர் ராஜேந்திரன், வன்னியர் சங்க நகரச் செயலாளர் பொம்மிடி தனசேகர், நகர முன்னாள் செயலாளர் பொம்மிடி ஓ.கே.சரவணன், பாப்பிரெட்டிப்பட்டி நகர இளைஞர் அணிச் செயலாளர் தங்கராஜ், உள்ளிட்ட பா.ம.க.வைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்நிகழ்வின்போது கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்ரமணி, தருமபுரி தொகுதி எம்.பி டாக்டர் எஸ்.செந்தில்குமார், தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories