தமிழ்நாடு

தி.மு.கவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி, மேயர்... முதலமைச்சரின் சிறப்பான செயல்பாடுகளால் பெருகும் பலம்!

அ.தி.மு.க முன்னாள் எம்.பி வசந்தி முருகேசன், முன்னாள் மேயர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் தி.மு.க.,வில் இணைந்தனர்.

தி.மு.கவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி, மேயர்... முதலமைச்சரின் சிறப்பான செயல்பாடுகளால் பெருகும் பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அ.தி.மு.க முன்னாள் எம்.பி வசந்தி முருகேசன், முன்னாள் மேயர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் தி.மு.க.,வில் இணைந்தனர்.

சென்னை அறிவாலயத்தில், மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திருநெல்வேலி மத்திய மாவட்ட அ.தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் எம்.பி., வசந்தி முருகேசன், திருநெல்வேலி முன்னாள் மேயர் புவனேஸ்வரி, முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், திருநெல்வேலி கூட்டுறவு பேரங்காடி தலைவருமான செல்லத்துரை ஆகியோர் தி.மு.க.,வில் இணைந்தனர்.

அ.தி.மு.க.,வை சேர்ந்த புதுக்கோட்டை ஒன்றியப் பெருந்தலைவர் சின்னையா, புதுக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் வெண்ணிலா கருப்பையா, திருமயம் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி ஆகியோரும், தி.மு.க.,வில் இணைந்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப்பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் சிறப்பான செயல்பாடுகளால் மாற்றுக் கட்சியினரும் தி.மு.கவை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பலரும் தி.மு.கவில் இணைந்து வருகின்றனர். அ.தி.மு.க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மேயருமான விஜிலா சத்யானந்த் சமீபத்தில் தி.மு.கவில் இணைந்தார்.

அ.தி.மு.கவில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.

அதேபோல், அ.தி.மு.கவில் வர்த்தக அணிச் செயலாளராகப் பொறுப்பு வகித்த சிந்து ரவிச்சந்திரன், நாமக்கல் முன்னாள் எம்.பி சுந்தரம் உள்ளிட்டோரும் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.கவில் இணைந்தனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான வ.து.நடராஜன் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து தி.மு.கவில் இணைந்தனர். இப்படி, தொடர்ச்சியாக அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் தி.மு.கவில் இணைந்து வருவது அ.தி.மு.கவை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories