தி.மு.க

நாட்டிலேயே வட்டியில்லா விவசாயக் கடன் கொடுத்த பிதாமகன் தலைவர் கலைஞர் - அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்!

அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு துறையில் இருக்கும் 4000 கிடங்குகள் பயன்படுத்தாமல் காலி இடங்களாக வைக்கப்பட்டது என சட்டப்பேரவையில் சாடல்.

நாட்டிலேயே வட்டியில்லா விவசாயக் கடன் கொடுத்த பிதாமகன் தலைவர் கலைஞர் - அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை குறித்த கொள்கை விளக்கக் குறிப்பை சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி வாசித்தார்.

அதில், “விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் திட்டத்தை கொண்டு வந்த பிதாமகன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்.

2021 -22 ஆம் ஆண்டில் 31 -7 -2021 வரை 98,036 விவசாயிகளுக்கு ரூ. 763.01 கோடி ரூபாய் மதிப்பில் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 7, 823 பட்டியலின வகுப்பு பட்டியலின/ பழங்குடியின விவசாயிகளுக்கு 53.30 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு துறையில் இருக்கும் 4000 கிடங்குகள் பயன்படுத்தாமல் காலி இடங்களாக வைக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்தவுடன் 3 மாதங்கள் தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மூன்று மாதங்களில் 5 லட்சம் டன் நெல் கிடங்காக அந்த 4000கிடங்கை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக மக்களுக்கு தரமான நல்ல அரிசியை வழங்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சரின் ஆணைப்படி இந்த பொற்கால ஆட்சியில் இந்த பணிகள் நிறைவேற்றி வருகிறது. 3 மாதங்களில் 3 ,38 ,512 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து மின்னணு குடும்ப அட்டைகளும் ஆதார் எண் பதிவு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட ஒரே திட்டம் வட்டியில்லா கடன் திட்டம். உரிய உறுப்பினர்கள் கடன் பெற வேண்டும். ஆனால் கடன் பெற்றவர்கள் மறுபடியும் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனை சரி செய்து 2,30,000 ஆயிரம் பேருக்கு 120 கோடி அளவில் புதிய உறுப்பினர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சை டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு 37 கோடி கடன் கடந்த அதிமுக அரசு கொடுத்தது. அதனை தற்போது கழக ஆட்சியில் 80 கோடியாக உயர்த்தி கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கடன் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாதமும் 20 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு , 20 லட்சம் லிட்டர் பாமாயில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2021 டிசம்பர் மாதம் வரை நீடித்து அரசு ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் 99.2 % அரிசி குடும்ப அட்டைதாரர்கள் கொரோனா பண நிவாரணத்தை பெற்றுள்ளார்கள்.

தமிழகத்தில் இந்த 14 மளிகை பொருள் அடங்கிய பையை 99 விழுக்காடு மேலானவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர். 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை 977.10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டது.

விவசாயக்கடனில் 5 சதவீதம் உயர்த்த நடவடிக்கை. இந்த ஆண்டு விவசாயிகளுக்கு 11,500 கோடி ரூபாய் கடன் தருவதற்கு அரசு நிர்ணயித்துள்ளது. இதனை 5 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பதே கழக அரசின் நோக்கமாக உள்ளது. ஆகவே இதனை 5% சதவீதம் உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மின்சாரத்தை சேமிக்கும் வகையில் திருவாரூர், நாகப்பட்டினம் , நாஞ்சிகோட்டை ,சேலம் மற்றும் தேனி ஆகிய ஆறு சேமிப்பு கிடங்குகளில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டு மின்சாரம் சேமிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories