தி.மு.க

3வது முறையும் முழு சம்பளத்தை ஏழை, எளியோருக்கு வழங்கி உதவிய திமுக MLA : நெகிழ்ச்சியில் ராஜபாளையம் மக்கள்!

ராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ். தங்கபாண்டியன் தனது 3வது மாத ஊதியத்தை ஏழை, எளிய, வயோதிக மக்களுக்கு வழங்கியுள்ளார்.

3வது முறையும் முழு சம்பளத்தை ஏழை, எளியோருக்கு வழங்கி உதவிய திமுக MLA : நெகிழ்ச்சியில் ராஜபாளையம் மக்கள்!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எஸ். தங்கபாண்டியன் தனது மூன்றாவது மாத சட்டமன்ற ஊதியத்தையும் ஏழை எளிய முதியோருக்கு வழங்கியதோடு அரிசிப் பைகளை கொடுத்து உதவியுள்ளார்.

கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் ஒவ்வொரு மாத சம்பளத்தையும் முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், ஏழை எளிய மக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்பட பலதரப்பட்ட மக்களுக்கு வழங்கி வந்துள்ளார்.

இரண்டாவது முறையாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ். தங்கபாண்டியன் கடந்த 2 மாத சம்பளத்தையும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணமாக வழங்கினார்.

மூன்றாவது மாத சம்பளத்தையும் ராஜபாளையம் காமராஜர் மண்டபத்தில் வைத்து ஏழை எளிய முதியோருக்கு ரொக்கம் மற்றும் அரிசி பைகள் வழங்கினார். 210 பேருக்கு உதவி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் ராமமூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் ராஜா, மாவட்ட மாணவரணி வேல்முருகன், மகளிரணி சுமதி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திமுக சட்டமன்ற உறுப்பினரின் இந்த உன்னதமான செயல் அத்தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு பாராட்டுகளையும் பெற்றுள்ளதுள்ளது.

banner

Related Stories

Related Stories