தி.மு.க

இன்று தி.மு.க-வில் இணைந்த முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்... மக்கள் பணியால் வலுப்பெறும் கழகம்!

அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் பலர் தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தனர்.

இன்று தி.மு.க-வில் இணைந்த முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்... மக்கள் பணியால் வலுப்பெறும் கழகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் ஈரோடு மாவட்டம்அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாநில வர்த்தக அணிச் செயலாளரும் - ஈரோடு புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளரும் - தமிழ்நாடு சிறுதொழில் வாரிய முன்னாள் தலைவருமான சிந்து ரவிச்சந்திரன், M.A.,B.L., ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் கே.ஆர்.கந்தசாமி, Ex.M.L.A., ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் நவமணி கந்தசாமி ஆகியோர் தலைமையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் பேரவை, பாசறை நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கே.எம்.விஜயலட்சுமி, சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியச் செயலாளரும், சத்தி வேளாண்மை - விற்பனையாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவருமான வி.சி.வரதராஜ், கோபிசெட்டிபாளையம் நகரச் செயலாளரும், கோபி வேளாண்மை - விற்பனையாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவருமான பி.கே.காளியப்பன் - ஈரோடு புறநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளரும், பவானி நகர்மன்ற முன்னாள் தலைவருமான எம்.ஆர்.துரை - ஈரோடு புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆர்.செந்தில்குமரன் - மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரும், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய இணைச் செயலாளருமான பி.முத்துலட்சுமி - மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரும், பவானிசாகர் ஒன்றிய துணைச் செயலாளருமான எம்.தங்கராஜ் - ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மோகனசுந்தரம் - ஈரோடு புறநகர் மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் புலவர் வாசு தண்டபாணி - ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணைச் செயலாளர் மார்டன் பி.மகேஷ்வரன்

ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர் ஏ.எம்ஆர்.ரவி, தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் கே.டி.செந்தில்குமார், கோபிசெட்டிபாளையம் நகர அம்மா பேரவை இணைச் செயலாளர் பி.குணசேகரன் - சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் என்.பி.ரகு - சத்தியமங்கலம் ஒன்றிய இளைஞர் - இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.சஞ்சீவ்குமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் - உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

அதுபோது கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., மற்றும் முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள், அமைப்புச் செயலாளர், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் மாண்புமிகு சு.முத்துசாமி, ஈரோடு மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

--

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவரும் - மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான வி.பி.செல்வக்குமார், பி.ஏ., பி.எல்., தலைமையில் டேவிட் செல்வின், Ex.M.L.A., - கோவில்பட்டி நகர முன்னாள் செயலாளர் எஸ்.சங்கரபாண்டியன் - மற்றும் சமத்துவ மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் மைக்கேல் எஸ்.ராஜேஷ் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அதுபோது கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., மற்றும் முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள், அமைப்புச் செயலாளர், மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, எம்.பி., தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் மாண்புமிகு அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், மாணவர் அணி துணைச் செயலாளர் உமரிசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

--

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கரூர் மாவட்டம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கடவூர் ஒன்றியச் செயலாளர் என்.செல்வராஜ் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் 80க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த கடவூர் ஒன்றியக்குழு உறுப்பினர்களான கே.லோகநாதன், ஏ.ரவிச்சந்திரன், எம்.முருகன், கோமதி பிரபாகர், மகாலட்சுமி சின்னதுரை, நிர்மலா அழகர், தவமணி காளிதாஸ், சரோஜா சின்னச்சாமி, தனம் பாலகிருஷ்ணன், தாந்தோணி ஒன்றியக்குழு உறுப்பினர் வசந்தி சரவணன், மாவட்ட விவசாய அணி தலைவரும் - வெள்ளியணை ஊராட்சி மன்றத் தலைவருமான என்.சுப்ரமணி, தாந்தோணி ஒன்றியக்குழு உறுப்பினர் அமுதாபூபதி, பரமத்தி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அஞ்சூர் ஊராட்சி தலைவர் நீலாவதி பழனிசாமி, கார்வழி ஊராட்சி தலைவர் ருக்குமணி மணி,

திருக்காடுதுறை ஊராட்சி தலைவர் அசோக்குமார், பவித்திரம் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், தோகைமலை கிழக்கு ஒன்றியம் தளிஞ்சி ஊராட்சி தலைவர் எம்.மனோகரன், குளித்தலைவர் ஒன்றியம் திம்மம்பட்டி ஊராட்சி தலைவர் செல்வி முருகன், நல்லூர் ஊராட்சி தலைவர் கலா குணசேகரன், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி தலைவர் எம்.அன்பரசு, முத்துரெங்கம்பட்டி ஊராட்சி தலைவர் ஆர்.மாரிமுத்து, கம்மநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி, கள்ளிப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், மாவட்டக் கழக இணைச் செயலாளர் கடவூர் சித்ரா, மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் குப்பம் பி.செந்தில், மணவாடி ஊராட்சி மு.செயலாளர் பிரின்ஸ்சரவணன், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் சத்யா பி.நவநீதன், ஒன்றிய இளைஞர் பாசறை தலைவர் எம்.பாஸ்கரன்,

கடவூர் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் வி.பி.மருதை, டி.பி.எஸ்.பிரபாகர், கீழப்பகுதி ஊராட்சி முன்னாள் தலைவர் நிஜாமுதீன், கீரனூர் ஊராட்சி முன்னாள் தலைவர் எம்.சின்னதுரை, கூட்டுறவு சங்க இயக்குநர் மார்க்கண்டேயன், கிளைச் செயலாளர்கள் சின்னச்சாமி, பாலகிருஷ்ணன், காணியாளம்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் எம்.காளிதாஸ், மேலப்பதி ஊராட்சி வி.தேவேந்திரன் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அதுபோது கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., மற்றும் முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள், அமைப்புச் செயலாளர், கரூர் மாவட்டச் செயலாளர் மாண்புமிகு வி.செந்தில்பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

--

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சிவகங்கை மாவட்டம் அ.ம.மு.க - அ.தி.மு.க.வைச் சேர்ந்த அ.ம.மு.க. அம்மா பேரவைச் செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் எஸ்.மாரியப்பன் கென்னடி, Ex.M.L.A., தலைமையில் அ.ம.மு.க. திருப்புவனம் கிழக்கு ஒன்றியச் செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் - அ.ம.மு.க. இளைஞர் பாசறை மாவட்டச் செயலாளரும் - பூவந்தி ஊராட்சி மன்றத் தலைவருமான வி.எஸ்.ஆறுமுகம் - அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர், இராஜகம்பீரம் கூட்டுறவு சங்கத் தலைவர் கே.வி.எஸ்.தனசேகரன், காரைக்குடி டாக்டர் சுரேந்திரன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அதுபோது கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., மற்றும் முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள், அமைப்புச் செயலாளர், சிவகங்கை மாவட்டச் செயலாளர் கேஆர்.பெரியகருப்பன், தலைமை இலக்கிய அணி தலைவர் மு.தென்னவன் ஆகியோர் உடனிருந்தனர்.

--

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை தெற்கு மாவட்டம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சைதை பகுதி முன்னாள் துணைச் செயலாளர் ஏ.சந்தோஷ்ராஜ், Ex.M.C., தி.மு.க.வில் இணைந்தார்.

அதுபோது கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., மற்றும் முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள், அமைப்புச் செயலாளர், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மாண்புமிகு மா.சுப்பிரமணியன், சைதை மேற்கு பகுதிச் செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

--

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் நாகை வடக்கு மாவட்டம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் கே.மகேந்திரன் தி.மு.க.வில் இணைந்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (25.6.2021), மாலை, நாகை வடக்கு மாவட்டம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் கே.மகேந்திரன் தி.மு.க.வில் இணைந்தார்.

அதுபோது கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., மற்றும் முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள், அமைப்புச் செயலாளர், நாகை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன், எம்.எல்.ஏ., எம்.எம்.சித்திக், முன்னாள் எம்.எல்.ஏ., மேக்கிரிமங்கலம் கோ.சி.மதி, திருமாவளவன், ஏ.ஆர்.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories