தமிழ்நாடு

“ஏ.. நிறுத்து...” - அரசுப்பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கிய தவெக-வினர்.. மதுபோதையில் அட்ராசிட்டி!

அரசுப்பேருந்தை வழிமறித்து மதுபோதையில் இருந்த த.வெ.க.வினர் ரகளையில் ஈடுபட்டதால் பெரம்பலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“ஏ.. நிறுத்து...” - அரசுப்பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கிய தவெக-வினர்.. மதுபோதையில் அட்ராசிட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பெரம்பலூர் மாவடட்டம் கிளியூர் பெருமத்தூர் கிராமத்தில் இருந்து அரசுப்பேருந்து (1F) ஒன்று பெரம்பலூரை நோக்கி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த சூழலில் மங்களமேடு அருகே வந்த போது, பேருந்தின் முன்பு போதையில் பைக்கில் சென்ற 3 இளைஞர்கள், பேருந்துக்கு வழி விடாமல் வளைந்து, நெளிந்து சென்றுள்ளனர்.

இதனால் வேறு வழியின்றி அரசுப் பேருந்து ஓட்டுநர், ஹாரன் அடித்து அந்த பைக்கை முந்தி சென்றார். இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் தங்களது பைக்கை முந்தி சென்ற அரசுப்பேருந்து ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டியும், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரட்டி வந்தும் தேவையூர் அருகே பேருந்தை வழிமறித்தனர்.

மேலும் பேருந்தில் இருந்து ஓட்டுநரை கீழே இறக்கி ஆபாசமாக திட்டியதோடு, பயணிகள் முன்பு ஓட்டுநரை சராமரியாக தாக்கியுள்ளனர். சக பயணிகள் அதனை தடுக்க முயன்றபோதும், அந்த போதை கும்பல் ஓட்டுநரை விடாமல் தாக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு அங்கிருந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து, போதை கும்பலை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

“ஏ.. நிறுத்து...” - அரசுப்பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கிய தவெக-வினர்.. மதுபோதையில் அட்ராசிட்டி!

விசாரித்ததில் அந்த போதை கும்பல், தேவையூர் த.வெ.க. கிளை நிர்வாகிகளான சதீஷ், சரவணன் ஜெகதீஸ் என்று தெரியவந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்களின் வலியுறுத்தலின் பேரில் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அதோடு தாக்குதலுக்கு உள்ளான ஓட்டுநர், ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தால் அரசு பேருந்தில் பயணித்த 50-க்கும் மேற்பட்டோர் சுமார் 1 மணி நேரம் காத்திருந்து மற்றொரு பேருந்தில் ஊருக்கு சென்றனர். பேருந்தில் கூட பயணம் செய்ய முடியாத அச்சமான சூழ்நிலையில் த.வெ.க ஆட்சி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

“ஏ.. நிறுத்து...” - அரசுப்பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கிய தவெக-வினர்.. மதுபோதையில் அட்ராசிட்டி!

தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நாள்தோறும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் என குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதோடு சிறார்களிடையே போதை பழக்கமும் அதிகரித்து வருகிறது.

இவை எவற்றுக்கும் பொறுப்பேற்காத தவெக அரசு, தாங்கள் தான் ஆட்சியில் இருக்கிறோம் என்பதை கூட உணராமல் திமுக மீது பழியை சுமத்தி வருகிறது. மேலும் இந்த சம்பவங்கள் குறித்து கேள்விகள் எழுப்பினாலும், அதனை வேண்டுமென்றே விஜய், அவரது அமைச்சர்கள் என அனைத்து தவெக-வினரும் சம்பந்தமில்லாத விஷயங்களை பசி மடைமாற்றம் செய்து வருகின்றனர்.

“ஏ.. நிறுத்து...” - அரசுப்பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கிய தவெக-வினர்.. மதுபோதையில் அட்ராசிட்டி!

இதில் வேடிக்கை என்னவென்றால், இது போன்ற அனைத்து குற்றச்செயல்களில் செயல்களிலும் ஈடுபடுபவர்களில் பெரும்பாலோனோர் தவெக-வை சேர்ந்தவர்களாகவே இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். அவர்கள் யார் மீதும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

அண்மையில் கூட சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற திருப்பதி குடை ஊர்வலத்தின் போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தவெக நிர்வாகி மதன்ராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், தவெக எம்.எல்.ஏ. ஒருவர் காவல் நிலையத்தில் இருந்து அவரை மீட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்படியான சூழலில் தற்போது வரை தவெக-வினரால் பொதுமக்கள் பெரும் அச்சத்திலும் சிராமத்திலும் உள்ள நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் அலட்சிய போக்குடனே இருந்து வருகிறது தவெக தலைமை.

banner

Related Stories

Related Stories