தி.மு.க

“உதிரத்திலேயே கொள்கை உரம் பாய்ச்சப்பட்டவர் உதயநிதி” - பழனிசாமியின் பிதற்றலுக்கு முரசொலியின் பதில்!

ஜெயலலிதா காலில் விழுந்து கிடந்தது மட்டுமின்றி, அவருக்கு கால் கழுவி சேவகம் புரிந்துவிட்டு இப்போது அடுத்த கட்சியில் மூக்கை நுழைப்பதேன்?

“உதிரத்திலேயே
கொள்கை உரம் பாய்ச்சப்பட்டவர் உதயநிதி” - பழனிசாமியின் பிதற்றலுக்கு முரசொலியின் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மு.க.ஸ்டாலினின் மகன் எப்பொழுது கட்சியில் இணைந்தார். தற்போது கட்சியில் சேர்ந்தவருக்குப் பதவி. முன்னோடித் தலைவர்களே அவர் வரும் காரின் கதவைத் திறந்து விட்டு கூனிக் குறுகி நிற்கிறார்கள் - இப்படி எல்லாம் பழனிச்சாமி இப்போது பிதற்றத் தொடங்கியுள்ளார்.

கழகத் தலைவர் தளபதி மட்டுமின்றி, இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி செல்லுமிடமெல்லாம் பெருங்கூட்டத்தை ஈர்க்கிறார். மற்ற கழக முன்னணியினர் போகுமிடமெங்கும் மக்கள் அவர்களது பேச்சைக் கேட்கத் திரளாகக் கூடுகின்றனர். இந்தச் செய்திகளைக் கேட்கும் முதலமைச்சர்பழனிச்சாமிக்கு இப்போது படுத்தால் தூக்கம் வருவதில்லை. அவரது பிரச்சாரத்திற்குப் பணம் கொடுத்து ஆள்பிடித்துச் சேர்த்தாலும், இவர் பேசத் தொடங்கியதும் உப்பு சப்பற்ற அந்த உளறலைக் கேட்டிட இயலாது, கூட்டம் கலைவதும், கலைந்து செல்பவர்களை, வழியிலே மனிதச் சங்கிலி ‘இணைப்புப் போல’ நின்று அவரது கட்சிக்காரர்கள் தடுக்கும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளிவருகின்றன!

இதனைக் கண்ட ஆத்திரத்தில் பழனிசாமி, தான் என்ன பேசுகிறோம் என்ற தெளிவின்றி உளறத் தொடங்கி விட்டதை அவரது பேச்சு காண்பிக்கிறது. ஸ்டாலினின் மகன் எப்போது கட்சியில் இணைந்தார், தற்போது கட்சியில் சேர்ந்தவருக்குப் பதவியா? - என்ற அவரது புலம்பலைக் கேட்கும் போது, இன்னும் சிறிது காலம் போனால், தேர்தல் நெருங்க நெருங்க அவர் தனது சட்டையைப் பிய்த்துக்கொண்டு சம்பந்தாசம்பந்தமின்றி பேசத் தொடங்கினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!

“உதிரத்திலேயே
கொள்கை உரம் பாய்ச்சப்பட்டவர் உதயநிதி” - பழனிசாமியின் பிதற்றலுக்கு முரசொலியின் பதில்!

‘ஸ்டாலினின் மகன் எப்போது கட்சியில் சேர்ந்தால் இவருக்கென்ன கவலை? அவரது கட்சியிலா சேர்ந்தார். ஜெயலலிதா எப்போது அ.தி.மு.க.வில் சேர்ந்தார்? அவருக்கு உடனடியாக கொள்கைப் பரப்புச்செயலாளர் பதவி தந்தாரே எம்.ஜி.ஆர்.? அப்போது எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கேட்டிருக்க வேண்டிய கேள்வி அல்லவா அது?அப்போது கேட்காமல், ஜெயலலிதா காலில்விழுந்து கிடந்தது மட்டுமின்றி, அவருக்குகால் கழுவி சேவகம் புரிந்துவிட்டு இப்போது அடுத்த கட்சியில் மூக்கை நுழைப்பதேன்?

பழனிச்சாமி இப்படி பேசுவதால், அவரது கூட்டணியில் இதுவரை இருக்கும் தே.மு.தி.மு.க.வினரையும் பா.ம.க.வினரையும் அந்தப் பேச்சு எத்தனை முகக்கோணல் கொள்ளச் செய்திருக்கும் என்ற விவஸ்தை கூட இல்லாது பேசலாமா? தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்றால் பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் யார்? மருத்துவர் ராமதாசை பெரிய அய்யா என்றும் ; அன்புமணியை சின்ன அய்யா என்றும் அழைக்கிறார்களே ; இதெல்லாம் பழனிச்சாமிக்குத் தெரியுமே;

தே.மு.தி.க.வில், பிரேமலதாவும், விஜயபிரபாகரனும், சுதீசும் போகுமிடமெல்லாம், பழனிச்சாமி பாஷையில் கூற வேண்டுமானால், அவர்களுக்கெல்லாம் கட்சியின் மற்ற மற்ற முன்னணியினர் கதவைத் திறந்து குனிந்து கும்பிடு போட்டு நிற்கிறார்களே, அதைப் பார்த்ததில்லையா; பழனிச்சாமி? அவ்வளவு ஏன்; ஓ.பி.எஸ். மகன், ஓ.பி.எஸ்.ஸின் தம்பி; பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன், ஜெயக்குமாரின் மகன்ம்என ஒரு வாரிசுப் பட்டாளமே அ.தி.மு.க.வில் பதவிகளை அனுபவித்து வருகின்றனவே - அது கண்ணில் படவில்லையா பழனிச்சாமிக்கு?

“உதிரத்திலேயே
கொள்கை உரம் பாய்ச்சப்பட்டவர் உதயநிதி” - பழனிசாமியின் பிதற்றலுக்கு முரசொலியின் பதில்!

ஒருவேளை அவர்களை எல்லாம் நேரடியாக விமர்சிக்க அஞ்சி இப்படி மறைமுகத் தாக்குதலை நடத்துகிறாரா? பழனிச்சாமி, அடுத்த பிரச்சாரத்தில் இதற்கெல்லாம் சரியான விளக்கம் தருவார் என எதிர்பார்க்கலாமா? உதயநிதி எப்போது இந்தக் கட்சியில் சேர்ந்தார் என்று கேட்கும் பழனிச்சாமிக்கு இங்கே வெளியிட்டிருக்கும் படமே உரிய விளக்கமாக இருக்கும் எனக் கருதுகிறோம்!

உதயநிதியின் உடலில் ஓடும் இரத்தம் கழக இரத்தம்! அவரது பிஞ்சுப் பருவமே கழகத்தின் போராட் டக்களத்தில் பட்டை தீட்டப்பட்டது என்பதற்கு; தாத்தா, தந்தை போல அவரும் கருப்புச் சட்டை அணிந்து காட்சி தருவதே தக்க அடையாளம்! பட்டுடையும், பகட்டுடைகளும் போட்டுப் பார்த்து அழகுபார்க்கும் வயதில் உதயநிதியின் தாத்தாவும், தந்தையும் அவருக்கு கருப்புடை அணிவித்து, பிள்ளைப் பருவத்திலேயே ‘செறுமுனைநோக்கிச்’ சென்றிடும் பயிற்சி தருகிற காட்சியே இங்கே படமாக மட்டுமின்றி, எடப்பாடி போன்ற ஏனோதானோக்களுக்குப் பாடமாகவும் விளங்குகிறது. இதுபோன்று, ஒரு உதயநிதி அல்ல; உதிரத்திலேயே கொள்கை உரம் பாய்ச்சப்பட்ட ஓராயிரம் உதயநிதிகளைக் கொண்டதுதான் தி.மு.கழகம். உதாரணத்துக்கு ஒரு சில தருகிறோம்.

“உதிரத்திலேயே
கொள்கை உரம் பாய்ச்சப்பட்டவர் உதயநிதி” - பழனிசாமியின் பிதற்றலுக்கு முரசொலியின் பதில்!

காஞ்சிப் பெரியவர் சி.வி.எம்.அண்ணாமலையின் பேரன் சி.வி.எம்.பி.எழிலரசன், திருச்சி தந்த தீரர் அன்பில் தர்மலிங்கத்தின் பேரன் அன்பில் மகேஷ், சென்னை மாவட்டத் தளகர்த்தராக விளங்கிய செங்குட்டுவனின் பேரன் டி.ஆர்.பி.ராஜா, கழக முன்னோடித் தலைவர் என்.வி.நடராசன் அவர்களின் பெயர்த்தி டாக்டர்.கனிமொழி சோமு, நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பி.டி.இராசன் அவர்களது பேரன் பி.டி.ஆர்.பி.பழனிவேல் தியாகராசன் எனப் பல மூன்றாம் தலைமுறை வாரிசுகள் கழக அணிகளில் பொறுப்பேற்றுள்ளனர்! தலைவர்கள், வாரிசுகள் மட்டுமின்றி, தொண்டர்கள் வாரிசுகளும் பொறுப்புகளேற்றுச்செயலாற்றி வருகின்றனர் என்பதை இந்தப் பட்டியல் பழனிச்சாமிக்கு உணர்த்திடும்.

“உதிரத்திலேயே
கொள்கை உரம் பாய்ச்சப்பட்டவர் உதயநிதி” - பழனிசாமியின் பிதற்றலுக்கு முரசொலியின் பதில்!

“இனமானம் காக்கப் புறப்பட்ட எந்த இயக்கத்திற்கும், எந்த வகையான உயர்ந்த கொள்கை, கோட்பாடு இலட்சியமாயினும் அவை நிலை பெறுவதற்கும், வெற்றி வாகை சூடுவதற்கும் இன்று வளரும் தலைமுறையினராக உள்ள துடிப்புள்ள இளைஞர்களே உறுதுணை;” தளபதி ஸ்டாலின் குறித்து எழுத்தாளர் சோலை வெளியிட்ட நூலுக்கு முன்னுரை எழுதிய பேராசிரியர் அவர்கள் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்கள்! ஆம்;

உதிரத்திலுள்ள உணர்வுகள் உள்ளத் துடிப்பாகி, ‘உலகிலே உதித்த போதே தந்தையை காராக்கிரத்தில் வாடும் இலட்சிய வீரனாகக் கண்டு, அந்தத் தந்தை பதித்த அன்பு முத்தத்தால் உடலில் ஏற்பட்ட சூடே, இலட்சிய உணர்வுகளுக்குத் தூண்டுதலாய் அமையப் பெற்றவர் உதயநிதி! கொள்ளை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கோலாச்சத் துடிக்கும் கூட்டம் - கொள்கைவாதிகளை விமர்சிக்குமுன் தங்கள் இயக்க ஜாதகத்தைக் கணித்தலே நலம் என்பதை பழனிச்சாமிக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி : முரசொலி

banner

Related Stories

Related Stories