தி.மு.க

“தமிழக மீனவர்களின் நலனை பாதுகாத்திடுங்கள்” - சர்வதேச மீனவர் தினத்தில் அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

தமிழக மீனவர்களின் நலனை பாதுகாத்து அவர்களும், அவர்களின் படகுகளும் அந்நிய இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

“தமிழக மீனவர்களின் நலனை பாதுகாத்திடுங்கள்” - சர்வதேச மீனவர் தினத்தில் அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சர்வதேச மீனவர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழக மீனவர்களின் நலனை பாதுகாத்து அவர்களும், அவர்களின் படகுகளும் அந்நிய இராணுவத்தின் எவ்வித தாக்குதலுக்கும் உள்ளாகாமல் பாதுகாத்திட மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியின் விவரம் பின்வருமாறு:

“சர்வதேச மீனவர் தினமான இன்று தமிழக மீனவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீன்பிடித் தொழிலையும், மீனவர்கள் நலனையும், அவர்களின் வாழ்வான மீன்வளத்தையும் போற்றும் இந்த தினத்தில் மீனவர்கள் அனைத்து வளமும் - வேலைவாய்ப்பும் பெற்று மீன்பிடித் தொழிலில் மென்மேலும் செழிக்க வேண்டும்.

மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களின் நலனை பாதுகாத்து அவர்களும், அவர்களின் படகுகளும் அந்நிய இராணுவத்தின் எவ்வித தாக்குதலுக்கும், சேதத்திற்கும் உள்ளாகாமல் பாதுகாத்திட மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சர்வதேச மீனவர் தினமான இன்று வேண்டுகோள் விடுக்கிறேன்.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories