தி.மு.க

கலைஞர் உருவப்படத்தை அவமதித்த பா.ஜ.க-வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க உள்ளிருப்பு போராட்டம்!

சுவரில் வரையப்பட்டிருந்த கலைஞர் உருவப்படத்தை அவமதித்த பா.ஜ.க-வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க எம்.எல்.ஏ தலைமையில் மாதவரம் காவல் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம்!

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முத்தமிழறிஞர் கலைஞரின் உருவப்படத்தை பா.ஜ.கவினர் பெயின்ட் அடித்து அழித்ததைக் கண்டித்தும், பா.ஜ.கவினர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் மாதவரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க உறுப்பினர் சுதர்சனம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட லட்சுமிபுரத்தில் அனுமதி பெற்று சுவரில் வரையப்பட்ட மறைந்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் படத்தை பெயின்ட்டால் மறைத்து, தி.மு.க சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை கிழித்து அவமதித்த பா.ஜ.கவினர் மீது மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து பா.ஜ.கவினரும் புகார் அளித்திருந்தனர். தி.மு.க எம்.எல்.ஏ அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் போலிஸார் பா.ஜ.கவினரின் புகார் மனுவை ஏற்று ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதால் அதனை கண்டித்து மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் மாதவரம் காவல் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

கலைஞர் உருவப்படத்தை அவமதித்த பா.ஜ.க-வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க உள்ளிருப்பு போராட்டம்!

முறையாக விளம்பர அனுமதி பெற்று சுவரில் தி.மு.க முன்னாள் தலைவர் கலைஞரின் உருவப்படத்தை வரைந்து வைத்திருந்த நிலையில் அதனை அழித்து அவமரியாதை செய்த பா.ஜ.க மாவட்ட செயலாளர் சிவா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories