தி.மு.க

"எல்லோரும் நம்முடன்" - பேரறிஞர் பிறந்தநாளில் மாபெரும் இணையவழி உறுப்பினர் சேர்க்கையை துவங்கியது தி.மு.க!

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் “எல்லோரும் நம்முடன்” எனும் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பைத் தொடங்குகிறது தி.மு.க!

"எல்லோரும் நம்முடன்" -  பேரறிஞர் பிறந்தநாளில் மாபெரும் இணையவழி உறுப்பினர் சேர்க்கையை துவங்கியது தி.மு.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க.,வின் முப்பெரும் விழாக் கொண்டாட்டத்தையொட்டி, பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் “எல்லோரும் நம்முடன்” எனும் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பைத் தொடங்குகிறது தி.மு.க!

அடுத்த 45 நாட்களில், குறைந்தது 25 இலட்சம் புதிய ஆன்லைன் உறுப்பினர்களைத் தி.மு.க.வில் இணைக்க கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தி.மு.கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உள்ள மக்களை இப்பணிக்காகச் சந்திக்கிறார்கள்.

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கிலிருந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "எல்லோரும் நம்முடன்" என்ற இந்த உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார்.

கடைக்கோடி கிராமம் வரை இணையத்தின் பாய்ச்சல் நிகழ்ந்துவருகிறது.

இவ்வேளையில், தி.மு.க.,வில் உறுப்பினராகச் சேர விரும்புவோரின் கனவை எளிமைப்படுத்தும் நோக்கில், இணையம் வழியாகவே கழக உறுப்பினராவதற்கான வாய்ப்பை எல்லோருக்கும் இந்த முயற்சி வழங்குகிறது.

18 வயது நிறைவடைந்த எவரும் https://www.dmk.in/joindmk என்ற இணையதளத்தில் சென்று அதில் கேட்கப்பட்ட விவரங்களைப் பதிந்து தி.மு.க.,வில் உறுப்பினராகச் சேரலாம்.

இணையம் வழியாக உறுப்பினர் ஆவோர், இதற்கென எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

"எல்லோரும் நம்முடன்" -  பேரறிஞர் பிறந்தநாளில் மாபெரும் இணையவழி உறுப்பினர் சேர்க்கையை துவங்கியது தி.மு.க!

வழக்கமான உறுப்பினர்களுக்கு உள்ள அதே பொறுப்புகளும் உரிமைகளும் இணையம் வழியாக உறுப்பினராகும் அனைவருக்கும் உண்டு.

எனினும், இணையம் வழியாக உறுப்பினரானோர், உட்கட்சித் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை பெற வேண்டுமெனில் - இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் உள்ளூர் கழகப் பிரதிநிதியால் நேரில் சரிபார்க்கப்படுவதுடன் கழக விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு - இணையம் வழியாக சேரும் உறுப்பினர் ஓராண்டை நிறைவு செய்ய வேண்டும்.

அப்படியில்லை எனில், சம்பந்தப்பட்ட இணைய உறுப்பினர் 25 தகுதியான நபர்களைக் கழகத்தில் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும்.

சாமானியர்களால் சாமானியர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம், மாறிவரும் சூழல்களுக்கேற்ப, காலந்தோறும் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டும் தகவமைத்துக்கொண்டும் வந்துள்ளது.

தமிழர் உரிமைகளின் பாதுகாவலனாகவும் தமிழ்ப் பண்பாட்டின் தலைமைப் பிரதிநிதியாகவும் திகழ்ந்துவரும் தி.மு.க., வளமான எதிர்காலத்தை நோக்கி, தமிழ்நாட்டைச் செலுத்தும் எண்ணத்துடன், தனது “எல்லோரும் நம்முடன்” என்ற இந்த உறுப்பினர் சேர்க்கை மூலம், அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்து ஒன்றிணைக்க முயல்கிறது.

இந்தச் சீரிய முயற்சியில் வெற்றிபெற அனைவரும் அயராது பாடுபடுவோம்.

banner

Related Stories

Related Stories