தி.மு.க

பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வுக்காக செப்.,9ம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு - தலைமைக்கழகம் அறிவிப்பு!

செப்டம்பர் 3ம் தேதி தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி மூலம் நடைபெற இருக்கிறது.

அறிவாலயம்
அறிவாலயம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளரை தேர்வு செய்ய, பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற செப்.9ம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெறும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 9-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணியளவில் காணொலி காட்சி மூலம், தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வுக்காக செப்.,9ம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு - தலைமைக்கழகம் அறிவிப்பு!

இக்கூட்டத்தில் தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். ஆகவே, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 3ம் தேதி காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி மூலம் தனது தலைமையில் நடைபெறும் என்று தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories