தி.மு.க

“அரசு மக்களுக்கானதா, தனியாருக்கானதா?” - தி.மு.க இளைஞரணி & மாணவரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கண்டனம்!

தி.மு.க இளைஞரணி - மாணவர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டத்தில் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

“அரசு மக்களுக்கானதா, தனியாருக்கானதா?” - தி.மு.க இளைஞரணி & மாணவரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க இளைஞரணி - மாணவர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் இன்று மாலை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு :

1. பாவலருக்கு இரங்கல்!

சமீபத்தில் காலமான பாவலர் க.மீனாட்சிசுந்தரம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தை நிறுவி அதன் பொதுச் செயலாளராக இருயதவர். தி.மு.க சார்பில் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருமுறை பொறுப்பு வகித்துத் திறம்பட பணியாற்றியவர். ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து அ.தி.மு.க அரசின், அரசு ஊழியர்களுக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்து நின்றவர். இத்தனைக்கும் மேலாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆருயிர் இளவல். அவரின் மறைவுக்கு இளைஞரணி-மாணவரணியின் இயத மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் தன் ஆழ்யத இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

காஜாபீர்மைதின் அவர்களுக்கு இரங்கல்!

பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் டி.பி.எம்.மைதீன்கான் அவர்களின் மகன் டி.பி.எம்.காஜாபீர்மைதின் உடல்நிலைக்குறைவு காரணமாக அகால மரணமடையதார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்தினோம். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது இக்கூட்டம்.

ஜெயஸ்ரீக்கு நீதி வேண்டும்!

முன்விரோதத்தின் காரணமாக அ.தி.மு.கவைச் சேர்ந்த கிளைக்கழக செயலாளர், முன்னாள் கவுன்சிலர் ஆகிய இருவரால் கைகால்கள் கட்டப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட விழுப்புரம் சிறுமதுரையைச் சேர்ந்த ஏதும் அறியா அப்பாவி மாணவி ஜெயஸ்ரீயின் மறைவுக்கு இந்தக் கூட்டம் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் காலம் தாழ்த்தாமல் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும் என்றும் தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறது.

“அரசு மக்களுக்கானதா, தனியாருக்கானதா?” - தி.மு.க இளைஞரணி & மாணவரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கண்டனம்!

2. வாக்களித்த வடமாநிலத்தவர்களுக்காகவாவது மனமிரங்கு!

வெயிலின் வெப்பம் தாங்காமல் இறந்தவர்கள், சாலை விபத்தில் பலியானவர்கள், பசியில் இறந்தவர்கள் என இந்த ஊரடங்கில் சொந்த ஊர் செல்ல இந்தியாவைக் குறுக்கும் நெடுக்குமாக நடந்தே கடக்க நினைத்து மரணத்தைத் தழுவிய வட மாநிலத் தொழிலாளர்களுக்கு இந்த இளைஞரணி-மாணவரணி அமைப்பாளர்கள் கூட்டம் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவர்களுக்கான நிவாரணங்களை வழங்காமல், போக்குவரத்துக்கான வாகன வசதிகளை ஏற்படுத்தித்தராமல், வெற்று அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு அவர்களைச் சாகக்கொடுத்த மத்திய பா.ஜ.க அரசையும், அவர்களுக்கான சரியான அடிப்படை வசதிகளைக்கூட செய்துத்தராத அடிமை அ.தி.மு.க அரசையும் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை இனியாவது செய்துதருமாறு மத்திய-மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறது.

விசாகப்பட்டினம் விபத்து - இரங்கல்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் வேதியியல் தொழிற்சாலையில் வேதி வாயு கசிவு காற்றில் கலந்து ஏற்பட்ட விபத்தில் இறந்த 10க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு இக்கூட்டம் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

3. இட ஒதுக்கீடு சலுகையல்ல, உரிமை!

அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. மருத்துவ படிப்பில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்வி நிறுவனங்களில் மட்டுமல்லாமல் மாநில அரசுகளுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் இந்த இட ஒதுக்கீடு பொருந்தும். இது சட்டப்படி பெற்ற நம் உரிமை. ஆனால் இந்த ஆண்டு அகில இந்தியத் தொகுப்புக்கான இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு எந்த அறிவிப்பும் இல்லாமல் நீக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கு எதிரான மத்திய அரசின் இச்செயலை வன்மையாக இக்கூட்டம் கண்டிக்கிறது. இதுகுறித்து எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் கள்ள மவுனம் காக்கும் அடிமை அ.தி.மு.க அரசுக்கும் இக்கூட்டம் தன் கண்டனத்தைப் பதிவுசெய்கிறது. இத்தவறு உடனடியாக சரிசெய்யப்படவேண்டும் என்று மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

“அரசு மக்களுக்கானதா, தனியாருக்கானதா?” - தி.மு.க இளைஞரணி & மாணவரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கண்டனம்!

4. இந்த அரசு மக்களுக்கானதா, தனியாருக்கானதா?

இந்திய வான் எல்லையைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது, விமான நிலையங்களில் தனியாரின் பங்களிப்பை அதிகரிப்பது, செயற்கைக்கோள் தயாரிப்பதிலும் அவற்றை ஏவுவதிலும் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பது, யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்துவது, நிலக்கரித்துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிக்க முதல் கட்டமாக 50 சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுவது, 500 கனிம சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும் என்று அறிவித்திருப்பது இப்படி வான்வெளி, விண்வெளி, மின்சாரம், கனிமம் உள்ளிட்ட முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவிப்பது என்பது மத்திய அரசின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது.

ஒருசில தனியார் நிறுவனங்கள் மட்டும் ஏகபோகமாகச் செயல்பட அரசே அவர்களை ஊக்கப்படுத்துவதாக மத்திய அரசின் இம்முடிவுகள் உணர்த்துகின்றன. கொரோனா கால நெருக்கடி சூழலைப் பயன்படுத்தி பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தும் மத்திய அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த எதேச்சதிகார முடிவுகளைக் கைவிடவேண்டும் என்றும் மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

5. புதிய கல்விக் கொள்கையைப் புகுத்தாதே!

‘இ வித்யா தீஷா’ திட்டத்தின் கீழ் ‘ஒரே தேசம்-ஒரே கல்வி திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று அறிவித்துள்ளதன் மூலம் கொரோனா சூழலைப் பயன்படுத்தி புதிய கல்விக்கொள்கையைக் கொள்ளைப்புறம் வழியாகப் புகுத்தும் மத்திய அரசின் நடவடிக்கையை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக கைவிடவேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது இக்கூட்டம்.

ஒன்றிணையச் செய்த தலைவருக்கு நன்றி!

கொரோனா கால ஊரடங்கில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுப் பசி, பட்டினியில் தவித்த மக்களை மத்திய, மாநில அரசுகளே கைவிட்ட நிலையில், அவர்களை தன் ‘ஒன்றிணைவோம் வா’ உதவிகள் வழங்கும் திட்டத்தின் மூலம் அவர்களுக்குத் தேவையான உணவு, உணவுப் பொருட்கள், மருந்து-மாத்திரைகள், நிதியுதவியை உடனுக்குடன் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து, வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை, பிடிப்பை அவர்களுக்கு ஏற்படுத்திய கழகத் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இளைஞரணி-மாணவரணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

“அரசு மக்களுக்கானதா, தனியாருக்கானதா?” - தி.மு.க இளைஞரணி & மாணவரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கண்டனம்!

6. கருத்துக்குக் கைதா?

கருத்துச் சுதந்திரம் என்பது நமது அடிப்படை உரிமை. ஆனால் அதைத் தவறாக பயன்படுத்தி கழகத்தின் மீதும், கழகத் தலைவர்கள் மீதும் தனிப்பட்ட முறையில் அவதூறு பரப்பும், பொய், புரட்டு ஆசாமிகளை எல்லாம் சுதந்திரமாக நடமாட அனுமதித்துவிட்டு, மத்திய மாநில அரசுகளின் தவறான திட்டங்களை, பிற்போக்குத்தனமான அறிவிப்புகளை சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கும் கழகத்தினரை ஒடுக்கவும், அவர்களை அச்சம்கொள்ள வைக்கவும் அடிதடி, வழிப்பறி போன்ற சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதியது கைது செய்யும் அ.தி.மு.க அரசையும், அதன் ஏவல் துறையாகச் செயல்படும் காவல்துறையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையை முறித்துப்போட முயலும் இதுபோன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என்றால் கழகத் தலைவர் அவர்களின் அனுமதி பெற்று மாநிலம் தழுவிய போராட்டத்தின் வாயிலாக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்தின் வாயிலாக சட்டப்படியும் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணுவோம் என்பதை இக்கூட்டம் வாயிலாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.

7. தேர்வைத் தள்ளிவை!

கொரோனா வைரஸ் தொற்று பரவலாக உள்ள இந்த பதட்டமான சூழலில் 9.55 லட்சம் மாணவர்கள் சம்பந்தப்பட்ட 10ம் வகுப்பு தேர்வைப் பெற்றோர், ஆசிரியர், ஆசிரியர் சங்கங்கள், சுகாதார நிபுணர்களைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்த பள்ளிக் கல்வித்துறையை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

“அரசு மக்களுக்கானதா, தனியாருக்கானதா?” - தி.மு.க இளைஞரணி & மாணவரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கண்டனம்!

ஊரடங்கில் நகரத்தில் உள்ள மக்கள் பலர் வைரஸ் தொற்று பயத்தால் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்து கிளம்பிவந்து தேர்வுகளை எழுதிமுடித்துவிட்டு மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவேண்டும் என்பது இந்த பதட்டமான சூழலில் தேவையற்ற அலைக்கழிப்பு.

தவிர இந்த ஊரடங்கில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வகுப்பறைச் சூழலிருந்து விலகி தங்களின் பொழுதுகளைக் கழித்துவருகின்றனர். மேலும் பலர், 10ம் வகுப்புத் தேர்வே இந்த ஆண்டு இருக்காது என்ற மனநிலையிலும் இருந்ததாக தெரிகிறது. இப்படிப்பட்ட மாணவர்களை வீட்டிலிருயது நேரடியாகத் தேர்வறைக்கு அழைத்து வயது தேர்வெழுது என்றால் அவர்களுக்குத் தேவையற்ற மனஅழுத்தத்தைத்தான் இத்தேர்வு தரும்.

8. கொரோனா அபாயம்!

தேர்வறையில் உள்ள மாணவர்களில் யாராவது ஒருவருக்குத் தொற்று இருந்தாலும் அது மற்ற மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பரவும் சூழல் உள்ளது. ‘தனிமனித விலகலுடன் தேர்வை நடத்துவோம்’ என்றாலும் தேர்வுக்கு முன்பும் பின்பும் கூடிப்பேசிக் கலையும் மனநிலையைக் கொண்ட மாணவர்களிடம் இது எந்தளவுக்குக் கடைப்பிடிக்கப்படும் என்பது தெரியாது.

அதனால் ஊரடங்கு முடியது அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி திறக்கப்பட்டு பத்து முதல் 15 வேலை நாட்கள் பள்ளி இயங்கியபிறகு இந்த பொதுத்தேர்வை நடத்துவது என்பதே சரியான முடிவாக இருக்கும்.

“அரசு மக்களுக்கானதா, தனியாருக்கானதா?” - தி.மு.க இளைஞரணி & மாணவரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கண்டனம்!

12ம் வகுப்புத் தேர்வு சமயத்தில்கூட, ‘மீதியுள்ள இந்த ஒரு தேர்வைத் தள்ளி வையுங்கள். பிறகு நடத்திக்கொள்ளலாம்’ என்று நம் கழகத் தலைவர் அவர்கள் வலியுறுத்தினார்கள். அப்போதும் இதேபோல் ‘நடத்தியே தீருவோம்’ என்று அரசு அத்தேர்வை நடத்தியது. ஆனால் அந்தத் தேர்வுக்கு வராமல் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டனர்.

அதேபோன்று 10ம் வகுப்புத் தேர்விலும் அரசு பிடிவாதமாக இருக்கும் நிலையில் தேர்வுக்கே விடுப்பு எடுக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயமும் உண்டு. இதை வெற்றி, தோல்வியாகக் கருதாமல் நம் மாணவர்களின் எதிர்கால நலன் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை மனதில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

9. தள்ளி வைக்க!

இந்த 10ம் வகுப்புத் தேர்வுகளையும், ஜூன் 2ல் நடக்கவுள்ள 12ம் வகுப்பு தேர்வையும், ஜூன் 4ம் தேதி நடக்கவுள்ள 11ம் வகுப்புத் தேர்வையும் தள்ளிவைக்குமாறு இந்தக் கூட்டம் அரசைக் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

banner

Related Stories

Related Stories