தி.மு.க

“ஓடாத தேராக இருக்கும் இந்த ஆட்சி விரைவில் அகற்றப்படும்” - சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு சூளுரை!

சட்டப்பேரவையும் தற்போது இந்த ஆட்சியைப் போல் பொலிவிழந்து காட்சியளிக்கிறது என தி.மு.க எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தொடரில் தொகுதி மக்களுக்காக சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் பேசிவருகின்றனர்.

இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

விவாதத்தில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ பேசியதாவது :

பொதுப்பணித்துறை :

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மிக முக்கியமான துறைகள். பொருளாதார வளர்ச்சிக்கும் வேளாண் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு மிகவும் அவசியம். அதற்கு இந்த இரண்டு துறைகள் மிக முக்கியமானவை.

“ஓடாத தேராக இருக்கும் இந்த ஆட்சி விரைவில் அகற்றப்படும்” - சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு சூளுரை!
Pugalenthi I

பல்வேறு துறைகள் குறித்தும், தங்கள் தொகுதிப் பிரச்னைகள் குறித்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களிடம் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை குறித்த எந்தக் கேள்விகளும் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட முதல்வர்கள் இருக்கும்போது அவர்கள் துறை சார்ந்த கேள்விகளை கேள்வி நேரத்தில் கேட்பதுண்டு. ஆனால் கடந்த நான்காண்டுகளாக பொதுப்பணித்துறை சார்பில் எந்த கேள்வியும் கேட்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை :

நெடுஞ்சாலைத்துறையில் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது சுங்கச்சாவடி தான். சுங்கச்சாவடியில் வடமாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படும் காரணத்தினாலேயே பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. மதுரையில் 9 கிலோமீட்டருக்குள் மூன்று இடங்களில் சுங்க வசூல் செய்கின்றனர். இதற்கு காரணம் என்ன?

“ஓடாத தேராக இருக்கும் இந்த ஆட்சி விரைவில் அகற்றப்படும்” - சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு சூளுரை!

சிங்கிள் டெண்டர் முறை தி.மு.க ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது என்றால், தற்போதைய அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் ‘இந்த மாவட்டம் உன்னுடையது; இந்த மாவட்டம் அவர்களுடையது’ என பிரித்துக் கொடுக்கும் சூழல்தான் உள்ளது.

முதல்வர், போக்குவரத்து நெரிசலால் நான்கு வழிச் சாலை போடப்பட்டது என்று சொல்கிறார். நான்கு வழிச் சாலை போடப்பட்டாலும் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. ஆம்புலன்ஸ் போவதற்குக் கூட அடிப்படை வசதிகள் அங்கு இல்லை.

செயல்பாடு அடிப்படையில் பராமரிப்பு பணிகளுக்கான திட்டம் 2012 -13ல் பொள்ளாச்சி கோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி என பல்வேறு கோட்டங்களில் அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அந்த குறிப்பிட்ட பணிகளை வெறும் 5 காண்ட்ராக்டர்கள் மட்டுமே செய்து வருகிறார்கள். மற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது, இதன் பின்னணி என்ன?

“ஓடாத தேராக இருக்கும் இந்த ஆட்சி விரைவில் அகற்றப்படும்” - சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு சூளுரை!

அ.தி.மு.க ஆட்சியில் நிலத்தை கையகப்படுத்தி பணியை தொடங்குகிறோம் என்ற மாய பிம்பத்தை இந்த அரசு ஏற்படுத்தி வருகிறது. 2018ம் ஆண்டு ராஜபாளையம் ரயில்வே மேம்பால பணியை 41 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு உத்தரவிட்டது.அந்தப் பணி இரண்டு வருடம் ஆகியும் 30% தான் நிறைவடைந்துள்ளது.

என்ன காரணம் என்றால் அந்தப் பகுதியில் இன்னும் நிலம் கையகப்படுத்தவில்லை. அதுமட்டுமல்லாமல் அந்த நிலத்திற்கான இழப்பீட்டு தொகையையும் இதுவரையிலும் நிர்ணயிக்க முடியாத ஒரு சூழலைத்தான் இந்த அரசு சந்தித்துக் கொண்டிருக்கிறது.

குடிமராமத்து பணிகளின் நாயகனா?

குடிமராமத்து பணிகளின் நாயகன் என முதல்வர் அ.தி.மு.கவினரால் பாராட்டப்படுகிறார். ஆனால் இதுவரை குடிமராமத்து திட்டத்தில் ஆற்றிய பணிகள் என்ன? எந்தெந்த இடங்களில் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன என இன்று வரை ஒரு பட்டியல் கூட வெளியிடப்படவில்லை.

“ஓடாத தேராக இருக்கும் இந்த ஆட்சி விரைவில் அகற்றப்படும்” - சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு சூளுரை!

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என தீர்ப்பு உள்ளது. 152 அடி கொள்ளளவு வைக்க அணை பலப்படுத்த வேண்டுமென சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. பேபி அணையில் பலப்படுத்த முடியாமல் உள்ளது. ஏனென்றால், அந்த அணைக்கும் 23 மரங்கள் உள்ளன.

அதை வெட்டுவதற்கு கேரள அரசுடனும் உச்சநீதிமன்றம் மூலமாகவும் பேசி வருகிறோம் என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். அந்த 23 மரங்களும் வளருகிறதே தவிர, அணையில் தண்ணீர் அளவு வளர எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

“ஓடாத தேராக இருக்கும் இந்த ஆட்சி விரைவில் அகற்றப்படும்” - சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு சூளுரை!

நதி நீர் இணைப்பு:

நதி நீர் இணைப்பு திட்டத்தில் உள்ள ஆறுகள் இணைப்பில் மிகப்பெரிய சாதனை செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். தற்போது காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தில் தி.மு.க ஆட்சிக் காலத்திலேயே துணை முதல்வராக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பலமுறை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தற்போது இந்த ஆட்சியில் காவிரி - குண்டாறு திட்டத்தில் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பிரிவில் மத்திய அரசிடம் ஒப்புதல் அளிக்க அனுப்பப்பட்டுள்ளது. இரண்டாவது பிரிவில் நிர்வாக ஒப்புதலை மாநில அரசு அளித்திருக்கிறது. தற்போது இந்த காவிரி குண்டாறு திட்டம் மாநில நிதியில் இருந்து செயல்படப் போகிறதா அல்லது மத்திய அரசு நிதியில் திட்டம் செயல்படப் போகிறதா? இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

மணல் தட்டுப்பாடு:

தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு உள்ளது. ஆற்று மணல் அள்ளுவதற்கு தடை விதித்துள்ள நிலையில், இந்த மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்துள்ளது? அதேபோல் எம்.சாண்ட் மணலை ஊக்குவிக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? பல இடங்களில் எம்.சாண்ட் என்னும் பெயரில் வெறும் டஸ்ட் மட்டுமே அனுப்பப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“ஓடாத தேராக இருக்கும் இந்த ஆட்சி விரைவில் அகற்றப்படும்” - சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு சூளுரை!

ஓடாத தேராக இருக்கும் அ.தி.மு.க அரசு :

அதேபோல் சென்னை தாடண்டர் நகரில் ஏ மற்றும் பி டைப் வீடுகள் கட்டப்பட்டுள்ள. 76 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு கொடுக்கப்படாமல் உள்ளது. எனவே பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு வீடுகளை ஒதுக்க வேண்டும்.

பொதுப்பணித்துறை சார்பில் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும்போது மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பொலிவுடன் இருக்கும். ஆனால் இன்று எந்த அலங்காரமும் இல்லாமல், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க ஆட்சியைப் போல் பொலிவிழந்து காட்சியளிக்கிறது. ஓடாத தேராக இருக்கும் இந்த ஆட்சி விரைவில் மாற்றப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக அமரும் நாளில் தான் தமிழ்நாடு நலம் பெறும்” என தன் பேச்சை நிறைவு செய்தார்.

banner

Related Stories

Related Stories