தி.மு.க

"எப்படி சாத்தியம் எனக் கேட்டார்கள்; இதோ நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

குறுகிய காலத்தில் இவ்வளவு பேரை கட்சியில் இணைத்த தி.மு.க செயல்வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இது எனப் பேசினார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

"எப்படி சாத்தியம் எனக் கேட்டார்கள்; இதோ நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க இளைஞரணியில் 30 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க திட்டமிடப்பட்டு உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டது. அதனடிப்படையில் 1,20,000க்கும் அதிகமான உறுப்பினர்களை சேர்த்த சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார்.

இந்த நிகழ்வில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்ரமணியன், இளைஞரணி துணை செயலாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தாயகம் கவி, ஆர்.டி.சேகர், ஜோயல், அசன் முகமது ஜின்னா, பைந்தமிழ் பாரி, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபாகர் ராஜா உள்ளிட்ட சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “தி.மு.கழகத்தின் இளைஞரணி செயலாளர் எனும் மிகப்பெரிய பொறுப்பை ஜூலை 4ம் தேதி என்னிடம் ஒப்படைத்தார்கள். அதன் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில், 30 லட்சம் உறுப்பினர்களை இளைஞரணிக்கு சேர்ப்போம் என தீர்மானம் நிறைவேற்றினோம். அது எப்படி சாத்தியம் எனக் கேட்டார்கள். தி.மு.க மாவட்ட பொறுப்பாளர்கள், இளைஞரணி பொறுப்பாளர்கள் மீதுள்ள நம்பிக்கையில் நிறைவேற்றிக் காட்டுவோம் என்றேன்.

"எப்படி சாத்தியம் எனக் கேட்டார்கள்; இதோ நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

இப்போது சென்னை தெற்கு மாவட்டத்தில் இளைஞரணியில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். குறுகிய காலத்தில் இவ்வளவு பேரை கட்சியில் இணைத்த தி.மு.க செயல்வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக இது அமைகிறது. மற்ற மாவட்ட தி.மு.க பொறுப்பாளர்களுக்கும், இளைஞரணி அமைப்பாளர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக இதைப் பார்க்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories