தி.மு.க

இந்தி பயிற்சி கைவிடப்பட்டது தி.மு.க தலைவருக்கு கிடைத்த மகத்தான வெற்றி - தங்கம் தென்னரசு புகழாரம்!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படும் என்ற அறிவிப்பு கைவிடப்படுவதாக தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்தி பயிற்சி கைவிடப்பட்டது தி.மு.க தலைவருக்கு கிடைத்த மகத்தான வெற்றி - தங்கம் தென்னரசு புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படும் என்ற அறிவிப்பு கைவிடப்படுவதாக தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பு தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட விரைவான - நேரடியான நடவடிக்கைக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும் என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அண்மையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள், அந்நிறுவனத்தில் பயிலும் எம்.பில் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்திமொழி கற்பிக்கப்படும் என்றும், அதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது எனவும் அறிவித்ததைக் கண்ணுற்றக் கழகத் தலைவர் தளபதியார் அவர்கள் உடனடியாக என்னை அழைத்து இது குறித்து மேலும் அதிக விவரங்களை அறிந்து கொண்டு, தமிழ் ஆராய்ச்சிகென்றே உருவாக்கப்பட்ட ஓர் உயராய்வு நிறுவனத்தில் இந்தி மொழியைக் கற்பிக்கத் துணியும் தமிழ் வளர்ச்சித் துறையின் போக்கினையும், இந்த அறிவிப்பினையும் வன்மையாக கண்டித்து கழகத்தின் சார்பில் அறிக்கை ஒன்றினை வெளியிடுமாறு பணித்தார்கள்.

இந்தி பயிற்சி கைவிடப்பட்டது தி.மு.க தலைவருக்கு கிடைத்த மகத்தான வெற்றி - தங்கம் தென்னரசு புகழாரம்!

தலைவர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க, தமிழ்வளர்ச்சித் துறையின் இந்த அடாத செயலைக் கண்டித்தும்; இந்த அறிவிப்பு, பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அடிப்படை கொள்கைகளுக்கும், நோக்கங்களுக்கும் முற்றிலும் எதிரானது எனத் தெரிவித்தும்; இதனை உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தியும், கடந்த 04-12-2019 அன்று அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தேன்.

அதனைத் தொடர்ந்து அன்றே பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிப்பது என்பது மறைந்த முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்களால் எடுக்கப்பட்ட முடிவு என்றும், இது கடந்த 2014ம் ஆண்டு முதலே நடைமுறையில் இருந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து, தலைவர் அவர்களது அறிவுரையின் அடிப்படையில் தொலைக்காட்சி ஊடகங்களைச் சந்தித்த நான், அவற்றின் வாயிலாக, 2014ம் ஆண்டு முதலே நடைமுறைப்படுத்தப்படும் ஒரு திட்டத்தை 2019-20ம் ஆண்டுக்கான தமிழ்வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் ஒரு புதிய அறிவிப்பாக வெளியிட்டு நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் ஏன் எனவும், இந்த அறிவிப்பிலும் அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அரசாணையிலும் “பிறமொழி” என்ற சொல்லுக்குப் பின்னே இந்தியை திட்டமிட்டே மறைத்ததின் உள்நோக்கம் என்ன? என்றும் வினாக்களை எழுப்பி இருந்தேன்.

இந்தி பயிற்சி கைவிடப்பட்டது தி.மு.க தலைவருக்கு கிடைத்த மகத்தான வெற்றி - தங்கம் தென்னரசு புகழாரம்!

இந்நிலையில் கழகத் தலைவரின் ஆணைக்கிணங்க, கழக மாணவரணியின் சார்பில் அதன் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் கழக மாணவரணியினர் தமிழ்வளர்ச்சித் துறையைக் கண்டித்து எழுச்சிமிக்கதோர் ஆர்ப்பாட்டத்தை சென்னையில் 06.12.2019 அன்று நடத்தினர்.

எடப்பாடி அரசின் காவல்துறை அடக்குமுறைக்கு ஆளாகிக் கைது செய்யப்பட்ட கழக மாணவரணித் தோழர்களை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் அவர்களும் விரைந்து சென்று சந்தித்து ஆறுதல் கூறியதுடன் தலைவர் அவர்களின் உறுதியான ஆதரவினையும் உணர்த்தினார்.

தமிழகமெங்கும் சிலிர்த்து எழுந்த தமிழுணர்வு ஆங்காங்கே எதிர்ப்புக் கணைகளாக எடப்பாடி அரசையும், தமிழ்வளர்ச்சித் துறையும் நோக்கிப் பாயத் துவங்கிவிட்ட நிலையில் அவசரம் அவசரமாக விழித்துக் கொண்ட தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் இன்று, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படும் என்ற அறிவிப்பு கைவிடப்படுவதாக அறிவித்துள்ளார்.

இந்தி பயிற்சி கைவிடப்பட்டது தி.மு.க தலைவருக்கு கிடைத்த மகத்தான வெற்றி - தங்கம் தென்னரசு புகழாரம்!

அரசின் இந்த அறிவிப்பு கழகத் தலைவர் அவர்கள் மேற்கொண்ட விரைவான - நேரடியான நடவடிக்கைக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

“பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு‚” என்ற புரட்சிக் கவிஞரின் வைர வரிகளை நெஞ்சில் நிலைநிறுத்தி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கொல்லைப் புறமாக நுழைந்த இந்தியை தடுத்து விரட்டிய கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசின் இந்த முடிவை கழகத்தின் சார்பில் வரவேற்கும் அதே வேளையில், ஆளுங்கட்சி தவறு செய்யத் துணியும் போதெல்லாம் அதனைத் தட்டிக் கேட்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி அரசியிலைத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் இப்போதும் முன்னெடுத்திருக்கின்றது என்பதையும் தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்'' என அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories