தி.மு.க

இந்தியை எந்த வகையில் திணிக்க முயற்சித்தாலும் தி.மு.க இளைஞர் அணி எதிர்த்து போராடும் - உதயநிதி ஸ்டாலின்

இந்தியை எந்த வகையில் திணிக்க முயசித்தலும் தி.மு.க இளைஞர் அணி போராடும் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்தியை எந்த வகையில் திணிக்க முயற்சித்தாலும் தி.மு.க இளைஞர் அணி எதிர்த்து போராடும் - உதயநிதி ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கரூர் மாவட்டம் தந்தோணி ஒன்றியம், ஜெகதாபி ஊராட்சி, முத்தக்காப்பட்டி வேலாயுதம் பாளையத்தில் தி.மு.க இளைஞர் அணியினரால் தூர்வாரப்பட்ட குளத்தை தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''இளைஞர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திபடி தி.மு.க இளைஞர் அணியினரால் இந்த குளம் தூர்வாரப்பட்டுள்ளது. இந்த பணிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து இதுபோன்ற பொது மக்களுக்கு பயனுள்ள பணிகளில் தி.மு.க இளைஞர் அணியினர் ஈடுபடுவார்கள்.

நாளை தி.மு.க அறிவித்திருந்த போராட்டம், அமித்ஷா தன் கருத்தில் இருந்து பின்வாங்கியது மற்றும் தி.மு.க தலைவரை ஆளுநர் அழைத்து பேசியதால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி. போராட்டம் தற்காலிகமாக தான் நிறுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியை எந்த வகையில் திணிக்க முயசித்தலும் தி.மு.க தலைமையின் ஆணை படி தி.மு.க இளைஞர் அணி போராடும்'' எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories