தி.மு.க

தி.மு.க-வினர் பேனர் வைத்திருப்பதாக உலா வந்த படங்கள் - அனைத்தும் அகற்றப்பட்ட ஆதாரத்துடன் பதிவிட்ட உதயநிதி!

திருவண்ணாமலையில் தி.மு.க-வினர் பேனர் வைத்ததாக தெரிவித்த அறப்போர் இயக்கத்துக்கு திமுக இளைஞரணி செயலாளர் ட்விட்டர் மூலம் ஆதாரத்துடன் பதிலளித்துள்ளார்.

தி.மு.க-வினர் பேனர் வைத்திருப்பதாக உலா வந்த படங்கள் - அனைத்தும் அகற்றப்பட்ட ஆதாரத்துடன் பதிவிட்ட உதயநிதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் சில நாட்களுக்கு முன்பு, அதிமுக பேனர் விழுந்ததால் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்ததால் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்ததது. இந்த கோர சம்பவத்தை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் முதலில் தி.மு.கவினர் எவரும் எந்த நிகழ்ச்சி மற்றும் கூட்டங்களுக்கும் பேனர், கட் அவுட், ப்ளக்ஸ் போன்ற எவையும் வைக்கக் கூடாது என கட்டளை இட்டுள்ளார்.

தி.மு.க-வினர் பேனர் வைத்திருப்பதாக உலா வந்த படங்கள் - அனைத்தும் அகற்றப்பட்ட ஆதாரத்துடன் பதிவிட்ட உதயநிதி!

அதன் பிறகு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உட்பட பலர் பேனர் வைக்கக் கூடாது என தத்தம் தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் உத்தரவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தி.மு.க-வின் முப்பெரும் விழாவுக்காக நெடுஞ்சாலை அருகே பேனர், வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் படங்கள் வளம் வந்தன. குறிப்பாக அறப்போர் இயக்கம் ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டிருந்தது.

திருவண்ணாமலையில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அனைத்தும், தி.மு.க தலைவரின் உத்தரவுக்கு பின்னர் நீக்கப்பட்டுவிட்டன. ஆனால், அந்த படங்கள் மட்டும் இணையத்தில் பரப்பட்டு வந்தன.

எனவே அறப்போர் இயக்கத்தின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “எங்கள் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் அந்த பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன என்றும், இந்த தகவலை அறப்போர் இயக்கத் தோழர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்." என்று குறிப்பிட்டு பேனர்கள் அகற்றப்பட்டதற்கான படங்களையும் இணைத்துள்ளார்.

இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலினின் பதிவுக்கு அறப்போர் இயக்கமும் நன்றி தெரிவித்து பதில் ட்வீட் செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories