தி.மு.க

“தேஜஸ் எக்ஸ்பிரஸை தாம்பரத்தில் நிறுத்தவேண்டும்” : தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை!

தென்னக ரயில்வே பொது மேலாளரிடம், முக்கிய திட்டங்களையும் பயணிகளுக்கான சேவைகளையும் தாமதமின்றி செயல்படுத்த வலியுறுத்தி விரிவான கடிதம் ஒன்றை அளித்தார் டி.ஆர்.பாலு எம்.பி.

“தேஜஸ் எக்ஸ்பிரஸை தாம்பரத்தில் நிறுத்தவேண்டும்” : தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவரும் - ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான டி.ஆர்.பாலு, இன்று (9-9-2019) காலை, தென்னக ரயில்வே தலைமை அலுவலகத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்ற சேலம் - சென்னை கோட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது தென்னக ரயில்வே பொது மேலாளரிடம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் பல ஆண்டுகளாக பணிகள் துவங்காமலும் துவக்கப்பட்டுள்ள பணிகள் நத்தை நகர்வது போல் மந்த கதியில் செயல்படுவதையும் சுட்டிக் காட்டியதுடன் பல்வேறு முக்கிய திட்டங்களையும் பயணிகள் வசதிகள் மற்றும் சேவைகளையும் தாமதமின்றி செயல்படுத்த வலியுறுத்தி விரிவான கடிதம் ஒன்றை அளித்தார் டி.ஆர்.பாலு எம்.பி., அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கை விவரங்கள் பின்வருமாறு :

சுரங்கப் பாதைகள், ரயில் மேம்பாலங்கள்

* சென்னை- திருப்பதி சாலை, அம்பத்தூர் டி.ஐ. சைக்கிள் நிறுவனம் அருகே ரயில் பாதைகளைக் கடக்க நான்கு வழி மேம்பாலம் அமைத்தல்.

* அம்பத்தூர் நகரில் லெவல் கிராபிக் எல்.சி.4மற்றும் எல்.சி.6, என இரு இடங்களில் புதிய சுரங்கப் பாதைகளும் கொரட்டூர் பகுதியில் எல்.சி. 4-ல் நத்தை வேகத்தில் நடைபெற்று வரும் சுரங்கப் பாதை பணிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும் ‌.

* ஆலந்தூர் பச்சையப்பன் கேட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எல்.சி.14 சுரங்கப்பாதை திட்டத்தை தொடரவேண்டும்.

* ஏ.எம். ஜெயின் கல்லூரி அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை பணிகளைத் தொடங்க வேண்டும்.

* திரிசூலம் ரயில் நிலையம் அருகில் லெவல் கிராஸிங்க் 22-ல் புதிதாக சுரங்கப் பாதை அமைக்க வேண்டும்.

“தேஜஸ் எக்ஸ்பிரஸை தாம்பரத்தில் நிறுத்தவேண்டும்” : தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை!

ரயில் சேவைகள்

* அம்பத்தூர் நிலையம் வழியாக இரு மார்க்கங்களிலும் செல்லும் ரயில்கள் அனைத்தும் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லவும், அம்பத்தூரை புறநகர் ரயில் சேவை மையமாகவும் அமைத்தல் அவசியம்

* இதற்கிடையில் ஏலகிரி, சப்தகிரி பெங்களூரு,கோவை எக்ஸ்பிரஸ் வண்டிகள் அம்பத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை தேவை.

* தெற்கு ரயில்வே போக்குவரத்துப் பிரிவு சென்ற 27.06.2019 அன்று பரிந்துரைத்த வண்ணம் சென்னை - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் இரண்டு மார்க்கத்திலும் நின்று செல்ல வேண்டும்.

பொது வசதிகள்

* வயது முதிர்ந்தோர் மற்றும் பெண்கள் வசதிக்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதல் எஸ்கலேட்டர் அமைக்க வேண்டும்.

* குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் கணினி முன்பதிவு மையங்கள் அமைக்க வேண்டும்.

இவ்வாறு தனது கடிதத்தில் டி.ஆர்.பாலு எம்.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories