தி.மு.க

"தமிழகம் முழுவதுமிருக்கும் நீர்நிலைகள் தொடர்ந்து தூர்வாரப்படும்" - உதயநிதி ஸ்டாலின் உறுதி!

தமிழகம் முழுவதுமிருக்கும் நீர்நிலைகளில் தொடர்ந்து தூர்வாரும் பணிகளில் ஈடுபடுவோம் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"தமிழகம் முழுவதுமிருக்கும் நீர்நிலைகள் தொடர்ந்து தூர்வாரப்படும்" - உதயநிதி ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

மதுரை வடக்கு மாவட்ட இளைஞர் அணியினர் மதுரை கிழக்கு தொகுதி நாராயணபுரம் குளத்தை தூர்வாரி கரையை மேம்படுத்தி நடைபாதை அமைத்துள்ளனர். அதை மக்கள் பயன்பாட்டிற்கு தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், ''தமிழகத்தில் உள்ள குளங்களை தூர்வாரி சீர் செய்வோம் என்று தீர்மானம் நிறைவேற்றி இருந்தோம். அதன் அடிப்படையில் இன்று இங்கு இந்தக் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளோம். அரசு செய்யவேண்டியதை நாங்கள் செய்துள்ளோம். இதுபோன்ற சிறப்பான பணிகள் மேலும் தொடரும்.

இளைஞர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி நாளை திருவாரூரில் தூர்வாரும் பணி தொடங்க உள்ளோம். முதல் கட்டமாக 2 குளங்களைத் தூர்வார உள்ளோம். தொடர்ந்து தமிழகம் முழுவதுமிருக்கும் பல்வேறு நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளில் ஈடுபட முடிவெடுத்துள்ளோம்.

வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் வந்தால் தான் முதலீடுகள் குறித்து தெரியும். ஏற்கனவே தமிழகத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எந்தப்பலனும் கிடைக்கவில்லை'' எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories