தி.மு.க

நடுவர் மன்றங்களை இணைத்தால் காவிரி ஆணைய உத்தரவுகள் என்னாகும்? - கேள்விகளால் பொருமித் தள்ளிய தயாநிதி மாறன்!

காவிரி ஆணையத்துக்கு போதிய அதிகாரம் வழங்காததால் அது பல்லில்லாத ஆணையமாக இருக்கிறது என தயாநிதி மாறன் மக்களவையில் கூறினார்.

நடுவர் மன்றங்களை இணைத்தால் காவிரி ஆணைய உத்தரவுகள் என்னாகும்? - கேள்விகளால் பொருமித் தள்ளிய தயாநிதி மாறன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அனைத்து நதிநீர் நடுவர் மன்றங்களையும் ஒன்றாக இணைக்கும் வகையில், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் ஆணைய மசோதாவை இன்று மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்தன.

அந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய தயாநிதி மாறன், ''புதிய நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் என்னவாகும். காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விடாததால் கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் குறுவை சாகுபடி நடைபெறவே இல்லை.

பிரதமர் மோடி இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்றார். அனால், விவசாயிகளை கண்டுகொள்ளாமல் இவற்றை அடைவது எப்படி. 29 வருட போராட்டத்திற்கு பிறகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.

தற்போது கொண்டு வரப்படும் இந்த மசோதாவால் நடைமுறையில் உள்ள ஆணையங்கள் கலைக்கப்படும். கலைக்கப்பட உள்ள நடுவர் மன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகள் நிலுவையில் இருக்கும் என மத்திய அரசு கூறுகிறது. அப்படியானால், காவிரி ஆணையத்தின் நிலை என்னவாகும்?.

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அமைக்கப்பட்ட காவிரி ஆணையத்தாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. கர்நாடகா தொடர்ந்து ஆணையத்தின் உத்தரவுகளை செயல்படுத்த மறுத்துவருகிறது. தொடர்ந்து தமிழகம் பாதிக்கப்பட்டு வருகிறது.

காவிரி ஆணையத்துக்கு போதிய அதிகாரம் வழங்காததால் அது பல்லில்லாத ஆணையமாக இருக்கிறது. எனவே காவிரி ஆணையத்துக்கு போதிய அதிகாரங்களை வழங்க வேண்டும். தொடர்ந்து விதிகளை மீறிவரும் கர்நாடகாவை தடுக்க ஜல்சக்தி அமைப்புக்கு அதிகாரம் உள்ளதா?. மத்தியில் உள்ள அரசின் ஒட்டு அரசியலால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது'' பொருமித் தள்ளினார்.

banner

Related Stories

Related Stories