தி.மு.க

முதுகலை மருத்துவத்திற்கு நெக்ஸ்ட் தேர்வு..ரத்து செய்யக்கோரிய கனிமொழி எம்.பி : பேசவிடாமல் தடுத்த சபாநாயகர்

நெக்ஸ்ட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.

முதுகலை மருத்துவத்திற்கு நெக்ஸ்ட் தேர்வு..ரத்து செய்யக்கோரிய கனிமொழி எம்.பி : பேசவிடாமல் தடுத்த சபாநாயகர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவுத்தேர்வு எழுதுவதை மத்திய பா.ஜ.க. அரசு கட்டாயமாக்கியது. இதனால், நாடு முழுவதும் நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தற்போது முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டில் NEXT (NATIONAL EXIT TEST) தேர்வை நடத்தி, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதுகலை மருத்துவத்திற்கு நெக்ஸ்ட் தேர்வு..ரத்து செய்யக்கோரிய கனிமொழி எம்.பி : பேசவிடாமல் தடுத்த சபாநாயகர்

அந்த தேர்வின் மதிப்பெண்கள் அடைப்படையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தேர்வை கடந்தாண்டே கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கைவிடப்பட்டது. இப்போது நெக்ஸ்ட் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது

முதுகலை மருத்துவத்திற்கு நெக்ஸ்ட் தேர்வு..ரத்து செய்யக்கோரிய கனிமொழி எம்.பி : பேசவிடாமல் தடுத்த சபாநாயகர்

இதுகுறித்து மக்களவையில் பேசிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “ மத்திய அமைச்சரவை நேற்று தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இது இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக இருக்கப் போகிறது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, மருத்துவப் படிப்பின் இறுதியாண்டு மாணவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு `நெக்ஸ்ட்’ (National Exit Test) என்ற பெயரில் தேசிய அளவில் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளதை என்பதை நாங்கள் எதிர்க்கிறோம். இது அகில இந்திய அளவில் மருத்துவத்துறைக்கு இன்னொரு பொதுத் தேர்வாக அமையும்.

ஏற்கெனவே மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன. நீட் தேர்வால் தங்கள் மருத்துவக் கனவுகள் சிதைவதால் பல மாணவர்கள் ஏற்கெனவே தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். நேற்று இந்த விவகாரம் பற்றி எங்கள் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்” என்று கனிமொழி கூறினார்.

ஆனால், அவர் தன் கருத்துகளை முழுவதுமாக கூறி முடிக்கும் முன்பே அதற்கு மேல் பேச சபாநாயகர் அனுமதி மறுத்தார். முன்னதாக, கடைசி ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு தேசிய அளவிலான பொதுத்தேர்வு (நெக்ஸ்ட்) நடத்தும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி தி.மு.க சார்பில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுக்கப்பட்டது.

ஆனால், சபாநாயகர் ஒத்திவைப்புத் தீர்மானத்தை ஏற்க மறுத்ததோடு இதுபற்றி கேள்வி நேரத்தில் பேசலாம் என்று கூறினார். ஆளும் பா.ஜ.க அரசு திட்டங்களை குறித்து மக்களவையில் பேசுவதற்கு தொடர்ந்து நேரம் கொடுக்காமல் வருவது தொடர்கதையாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories