தி.மு.க

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்தவர்களுக்கு கனிமொழி எம்.பி அஞ்சலி!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில், நம் மண்ணுக்காகவும் நமது உரிமைகளுக்காகவும் போராடி உயிர் நீத்தவர்களுக்கு கனிமொழி எம்பி தனது அஞ்சலியை தெரிவித்துள்ளார்.

kanimozhi m.p
twitter kanimozhi m.p
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு இதே நாளில் (மே 22) அமைதியான முறையில் பேரணி சென்ற மக்கள் மீது அதிமுக அரசால் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. இதில் ஸ்நோலின் என்ற மாணவி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், ட்விட்டரில் கருத்து கூறிய கனிமொழி எம்.பி "சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய நம் மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட ஓராண்டு நிறைவுநாள் இன்று. நம் மண்ணுக்காகவும் நமது உரிமைகளுக்காகவும் போராடி உயிர்நீத்தவர்களுக்கு என் அஞ்சலி!" என பதிவிட்டுள்ளார்.

மேலும், இன்னொரு ட்வீட்டில், "கழகத் தலைவர் தளபதி அவர்கள் உறுதியளித்தது போல் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் குற்றமிழைத்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories