தி.மு.க

சூலூர் இடைத்தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்தார் பொங்கலூர் பழனிச்சாமி!

சூலூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

சூலூர் இடைத்தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்தார் பொங்கலூர் பழனிச்சாமி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மே 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போற்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி அவர்கள், வேட்புமனுவை சூலூர் தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் தாக்கல் செய்தார்.

அப்போது, தொகுதிப் பொறுப்பாளரும் கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் உடனிருந்தனர். சூலூர் தொகுதியில் பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற தி.மு.க பிரமுகர்களும், தொண்டர்களும் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

சூலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மே 5,6-ம் தேதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை ஆற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories