சினிமா

டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?

டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள காலத்தில் OTT தளங்கள் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. பலரும் திரைப்படங்கள், சீரிஸ் உள்ளிட்டவைகளை OTT தளங்கள் மூலம் தங்கள் வீட்டில் இருந்தே பார்த்து வருகின்றனர். சில திரைப்படங்கள் நேரடியாகவே OTT தளங்களில் வெளியாகும் நிலையில், பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகி சில மாதங்களுக்கு பிறகு OTT தளங்களில் வெளியாகிறது.

அந்த வகையில் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்கு மற்றும் OTT தளங்களில் வெளியாகும் படங்கள் பட்டியல் வருமாறு :-

டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?

திரையரங்கு :-

=> வா வாத்தியார் (தமிழ்) - டிச. 12

'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்துள்ளார். மேலும் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் நாளை மறுநாள் (டிச. 12) திரையரங்குகளில் வெளியாகிறது.

டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?

=> படையப்பா (தமிழ்) - டிச. 12

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன் உள்ளிட்ட பலரும் நடித்த ‘படையப்பா’ படம் 1999-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம்தான் 'படையப்பா'. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்த படம், ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று டிச.12-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?

=> மகாசேனா Volume - 1 (தமிழ்) - டிச. 12

தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், யோகி பாபு, சிருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் நடித்துள்ள படம்தான் ‘மகாசேனா’. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் இப்படம், டிசம்பர் 12-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?

=> மாண்புமிகு பறை (தமிழ்) - டிச. 12

அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படதில் லியோ சிவக்குமார், காயத்ரி ரமா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் டிச.12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

எளிய மக்களின் இசையும், வாழ்வும் அச்சு அசலாக இப்படத்தில் பேசப்பட்டுள்ள நிலையில், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழாவில் மே 2025ல் திரையிடப்பட்டது. அப்போது, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்ற இந்தப் படம், சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற கலாச்சார பாரம்பரியம் பிரிவில் விருதை பெற்றுள்ளது.

டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?

=> யாரு போட்ட கோடு (தமிழ்) - டிச. 12

அறிமுக இயக்குநர் லெனின் வடமலை இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘யாரு போட்ட கோடு’. இதில் அறிமுக நடிகர் பிரபாகரன் நாயகனாகவும், மேஹாலி மீனாட்சி நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?

=> அகண்டா 2 (தெலுங்கு) - டிச. 12

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாநடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி பெரும் ஹிட் கொடுத்தது. இதைத்தொடர்ந்து தற்போது அகண்டா 2 : தாண்டவம் திரைப்படம் வரும் டிச.12-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

போயபட்டி ஸ்ரீனு எழுதி இயக்கியுள்ள ‘அகண்டா 2’ திரைப்படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாகவும் ஆதி பினிசெட்டி வில்லனாகவும் நடித்துள்ளனர்.

டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?

OTT :-

=> காந்தா (பான் இந்தியா) - Netflix

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் காந்தா. பான் இந்திய திரைப்படமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த மாதம் 14-ம் தேதி வெளியான இப்படம், வரும் டிச .12-ம் தேதி Netflix OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?

=> ஆரோமலே (தமிழ்) - Jio Hotstar - Dec 12

சாரங் தியாகு இயக்கத்தில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்த 'ஆரோமலே' திரைப்படம் கடந்த மாதம் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த சூழலில் தற்போது Jio Hotstar OTT தளத்தில் வரும் டிச.12-ம் தேதி வெளியாகிறது.

=> Wake Up Dead Man : A Knives Out Mystery (English) - Netflix

=> Single Papa (ஹிந்தி) - Netflix

டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?

=> F1 (English) - Apple TV

=> 3 Roses Season 2 (தெலுங்கு) - Aha

=> The Great Shamsuddin Family (ஹிந்தி) - JioHotstar

=> Taylor Swift: The Eras Tour – The Final Show (English) - JioHotstar

banner

Related Stories

Related Stories