தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தான். அந்தவகையில் இன்றைய தினம் 10 திரைப்படங்கள் திரையரங்கில் ரிலீஸ் ஆகிறது.
உசுரே
டி.கோபால் இயக்கத்தில் டி.ஜே அருணாச்சலம், பிக்பாஸ் ஜனனி ஜோடியாக நடித்த உருவான திரைப்படம் 'உசுரே'. காதல், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
சரண்டர்
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் நடிப்பில் பாடினி குமார் என்ற புதுமுக நடிகை நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சரண்டர்'. காவல்துறை அதிகாரியான தர்ஷன் வழக்கு விசாரணையில் எதிர்கொள்ளும் பிரச்னைகளே இப்படத்தின் கதைக்களம்.
பிளாக்மெயில்
நடிகர் ஜி.வி பிரகாஷ், தேஜு அஸ்வினி நடிப்பில் உருவாகியுள்ள 'பிளாக்மெயில்'. திரைப்படமும் இன்று ரிலீசாகவுள்ளது.
ஹவுஸ் மேட்ஸ்
நடிகர் தர்ஷன், மலையாள நடிகை அர்ஷா பைஜூ, காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஹவுஸ் மேட்ஸ். இப்படம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
மிஸ்டர் ஜூ கீப்பர்
குக்வித் கோமாளி பிரபலம் புகழ் நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸ்டர் ஜூ கீப்பர்' என்ற படமும், பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா கலகேரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ' அக்யூஸ்ட்' என்ற திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.
அதேபோல் இயக்குநர் அனிஷ் அஷ்ரப் இயக்கத்தில் நடிகர் வெற்றி நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'முதல்பக்கம்' என்ற படமும், எஸ். விஜயசேகரன் இயக்கத்தில் நபி நந்தி, ஷரத், சுவாசிகா, பூனம் கவுர், வேல ராமமூர்த்தி, மொட்ட ராஜேந்திரன், சங்கிலி முருகன், எம்.எஸ்.பாஷ்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'போகி' திரைப்படமும் வெளியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் 10 திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
OTTயில் இன்று வெளியாகும் படங்கள்!
லவ் மேரேஜ்
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் அமோக வரவேற்பை பெற்ற லவ் மேரேஜ் திரைப்படம் வருகிற இன்று முதல் அமேசான் பிரைம் OTTயில் வெளியாகிறது.
பறந்து போ
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா கூட்டணியில் உருவான பறந்து போ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.
3BHK
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவையானி நடித்த சூப்பர் ஹிட் படமான 3BHK அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.