சினிமா

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் : ஒரே வாரத்தில் 3 பேர் - சோகத்தில் திரையுலகம்!

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 திரைபிரபலங்கள் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் :  ஒரே வாரத்தில் 3 பேர் - சோகத்தில் திரையுலகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1980 ஆம் ஆண்டு இவர்கள் ’வித்தியாசமானவர்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக சினிமாவிற்குள் நுழைந்தவர் வேலு பிரபாகரன். ஆனால் இவர் ஒளிப்பதிவாளர் என்ற அறிமுகத்தை விட இயக்குநர் என்ற அடையாளத்தை கொடுத்தது ’நாளைய மனிதன்” படம்.

அதன் பின்னர் ’அதிசய மனிதன்’, ’அசுரன்’, ’ராஜாளி’ போன்ற படிங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென்று இரு அடையாளத்தை உருவாக்கியவர் வேலு பிரபாகரன். இயக்குனராக மட்டுமல்லாது சில படங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த வேலு பிரபாகரன், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது மறைவுக்கு திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிரபல நடிகர் கோட்டா சீனவாச ராவ், பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, இயக்குநர் வேலு பிரபாகரன் என அடுத்தடுத்து 3 திரை ஆளுமைகள் மறைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories