சினிமா

1 கிராம் ரூ.12,000.. சப்ளை செய்த அதிமுக நிர்வாகி.. போதை வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி?

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 கிராம் ரூ.12,000.. சப்ளை செய்த அதிமுக நிர்வாகி.. போதை வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் மதுபான விடுதி ஒன்றில் தகராறில் ஈடுபட்டதாக அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத், அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி, போதை பொருள் பயன்படுத்துதல் உள்ளிட்ட புகார்கள் கொடுக்கப்பட்டன.

எனவே இதுகுறித்து பிரசாத்திடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது மொபைலை சோதனை செய்தனர். தொடர்ந்து போதைப் பொருளை யாரிடம் வாங்கினார், யாருக்கெல்லாம் சப்ளை செய்தார் என்று போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொக்கைன் சப்ளையரான பிரதீப் குமார் என்பவர் சிக்கினார்.

1 கிராம் ரூ.12,000.. சப்ளை செய்த அதிமுக நிர்வாகி.. போதை வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி?

தொடர்ந்து அவர்கள் இருவரையும் விசாரிக்கையில், பிரபல நடிகர் ஸ்ரீகாந்துக்கு பிரதீப்பிடம் இருந்து போதைப்பொருள் வாங்கி கொடுத்ததாக அதிமுக நிர்வாகி பிரசாத் வாக்குமூலம் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று (ஜூன் 23) காலை 8 மணி அளவில் நடிகர் ஸ்ரீகாந்தை விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள F3 காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே போதைப்பொருள் வழக்கில் அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டதையடுத்து அதிமுகவுக்கு கண்டனங்களும், விமர்சனங்களும் வலுத்தது. எனவே பிரசாத்தை கட்சியில் இருந்து நீக்கியது அதிமுக.

1 கிராம் ரூ.12,000.. சப்ளை செய்த அதிமுக நிர்வாகி.. போதை வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி?

இதனைத்தொடர்ந்து போதை பொருள் பயன்படுத்தினாரா என்று நடிகர் ஸ்ரீகாந்துக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது போலீசார் நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் ஸ்ரீகாந்த் பிரதீப் என்கிற நபரிடம் போதை பொருளை கிராம் ஒன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் வாங்கி இருக்கிறார்.

1 கிராம் ரூ.12,000.. சப்ளை செய்த அதிமுக நிர்வாகி.. போதை வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி?

அதன் அடிப்படையில் பிரதீப் வாக்குமூலத்தில் ஸ்ரீகாந்த் 40 முறை போதை பொருள் வாங்கி உள்ளதாகவும் அதற்கான பணத்தை பிரதீப்புக்கு GPay மூலம் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி சுமார் ரூ.4 லட்சத்து 72 ஆயிரம் பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்தை வைத்து 'தீங்கரை' என்ற படத்தை தயாரித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories