பிக்பாஸ் வீட்டில் பொம்மை டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில், ராணவ்வுடன், ரயான், சௌந்தர்யா, ஜாக்குலின் ஆகியோர் சண்டையிடும் காட்சிகள் இன்றைய ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 8-வது சீசன் தொடங்கி 52 நாட்களை கடந்து விட்டது. இந்த நிகழ்ச்சியின் 8-வது வாரத்திற்கான கேப்டனாக பதவியேற்று கொண்ட தீபக்கிற்கு, 5 பூக்கள் கொண்ட பூந்தொட்டி ஒன்று பிக்பாஸால் வழங்கப்பட்டது. captaincy-ல் குறை இருந்தால் ஒரு ஒரு பூக்களாக பறிக்கப்பட்டு 5 பூக்களுக்கும் பறிக்கப்பட்டால் captaincy பறிபோகும் என்பது விதி. கேப்டனான உடனேயே வீட்டிற்கு கிச்சன் இன்சார்ஜ், ஸ்டோர் இன்சார்ஜ் என அனைத்து பொறுப்பாளர்களையும் நியமித்து, அவர்களுக்கு சவுந்தர்யாவை தலைமை பொறுப்பாளராகவும் நியமித்தார் தீபக். முதல் நாளே தனது அதிரடியான செயல்களால் பிக்பாஸிடமும் பாராட்டுப்பெற்றார்.
இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் தொடங்கியது. இதில் ஜாக்குலின், ரஞ்சித் ஆகியோர் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டனர். இவர்களை தொடர்ந்து, சாச்சனா, சிவகுமார், சத்யா, ஆனந்தி, விஷால், அன்ஷிதா, ரயான் மற்றும் மஞ்சரி ஆகியோரும் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றுள்னர். இதையடுத்து 'சுட சுட ஒரு half boil' என்ற ஷாப்பிங் டாஸ்கை தொடங்கினார் பிக்பாஸ். இதில் 17 half boil-கள் சரியாக இருந்ததால் 8,500 points-கள் வழக்கப்பட்டு ஷாப்பிங் நடைபெற்றது.
இந்த சீசனில் தர்ஷிகாவும் விஷாலும் லவ் ட்ராக் ஒன்றை தொடங்கியுள்ளனர். லவ் இருக்கா இல்லையா என்ற குழப்பத்திலேயே இருவரும் வீட்டிற்குள் வலம் வருவதோடு, சக போட்டியாளர்களையும் கடுப்பேற்றி வருகின்றனர். இதில் அன்ஷிதா, பவித்ரா ஆகியோர் தர்ஷிகா மீது அக்கறையுடன் கூடிய தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே 'நம்பிக்கைக்குரிய நபர் யார்' என்று ஆண்கள் அணியினர் பெண்கள் அணியை தேர்வு செய்யும் டாஸ்க் வழங்கப்பட்டது. இதில், முதலாவதாக அன்ஷிதா, அவரைத்தொடர்ந்து பவித்ரா, தர்ஷிகா, சாச்சனா, ஆனந்தி, ஜாக்குலின், சௌந்தர்யா மற்றும் மஞ்சரி ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்த தொடர்ச்சியாக weekly task - ஆக, 'நீயும் பொம்மை நானும் பொம்மை' டாஸ்க் தொடங்கியது. ஒருவர் தன்னுடைய பெயர் போட்ட பொம்மையை எடுக்க முடியாது, யாருடைய பெயர் போட்ட பொம்மைக்கு இடமில்லையோ அவர் அவுட் என்ற விதிகளும் அறிவிக்கப்பட்டது. இதில், முதல் சுற்றில் சவுந்தர்யா, ஜெப்ரி, ஜாக்குலின், ரயான் ஆகியோர் gang சேர்ந்து விளையாட தொடங்கினர். அப்போது ராணவ் பெயர் போட்ட பொம்மை ரஞ்சித் கையில் இருந்தது. அதை வாங்கி கொண்ட ஜாக்குலின், தர்ஷிகா பொம்மையை தந்து விட்டு சென்றார். இதனால் தர்ஷிகாவுக்கும் ஜாக்குலினிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் தர்ஷிகா அவுட் ஆகி வெளியேறினார். எனினும் இதில் நிறைய குளறுபடிகள் நடந்ததால் முதல் சுற்றை ரத்து செய்து முதலில் இருந்து விளையாட்டை தொடங்கினார் பிக்பாஸ். இதில் சௌந்தர்யா வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து பொம்மை டாஸ்கின் இரண்டாவது சுற்று தொடங்கியது. இதில் மஞ்சரியின் பொம்மையை அன்ஷிதா வைத்திருக்க, மஞ்சரியிடம் ஜாக்குலின் பொம்மையும், ஜாக்குலினிடம் தீபக் பொம்மையும் இருந்தது. இவர்கள் மூவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பொம்மையை உள்ளே வைப்பதில் ஒரு கலவரமே நடந்தது. வெகு நேரமாகியும் இவர்கள் மூவரும் பொம்மையை உள்ளே வைக்க முன்வராதததால் பொம்மையை உள்ளே வைக்கும் வரை இவர்கள் மூவருக்கும் உணவு, தண்ணீர், கழிப்பறை செல்வது போன்ற எதுவும் செய்யக்கூடாது என பிக்பாஸால் அறிவிக்கப்பட்டது.
சற்று நேரம் பொறுத்து பார்த்த மஞ்சரி தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பொம்மையை stall உள்ளே வைத்து விட்டு சென்றார். இறுதியில் ஜாக்குலின் vs அன்ஷிதா என போட்டி திசை திரும்பியது. இருவரும் பிடிவாதமாக பொம்மையை வைக்காமல் இருந்தனர். இரவு இவர்கள் தூங்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும் இருவரும் அதிகாலை 3 மணி வரை மல்லுக்கட்ட, இயற்கை உபாதை காரணமாக மஞ்சரியின் பொம்மையை stall உள்ளே வைத்துவிட்டு சென்றார் அன்ஷிதா. இறுதியில் தீபக் பொம்மை சுற்றில் இருந்து வெளியேறியது.
டாஸ்கின் அடுத்த சுற்று தொடங்கியது. இதில் stall வெளியேவும் பொம்மையை மாற்றிக் கொள்ளலாம், மற்றவர்களை பொம்மையை உள்ளே வைக்க விடாமல் தடுக்கவும் செய்யலாம் என்ற புது விதிகள் அறிவிக்கப்பட்டது. இந்த சுற்றில் போட்டியாளர்களிடம் தள்ளு முள்ளு ஏற்பட்டு விஷால் சிக்கி தவிக்க, இறுதியில் அன்ஷிதா போட்டியில் இருந்து வெளியேறினார். அதற்கு அடுத்து நடந்த சுற்றில் மஞ்சரி தலையில் அடியுடன் முத்து வெளியேறினார்.
இதையடுத்து பிக்பாஸ் வீட்டின் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் வெளியே இருக்கும் போட்டியாளர்கள் போட்டிக்குள்ள வரலாம் என்று பிக்பாஸால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராணவ்வுடன், ரயான், சௌந்தர்யா, ஜாக்குலின் ஆகியோரிடையே கடுமையான வாக்குவாதம் நடைபெறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. மேலும் "பேசுற ஒரு point-ல தடுத்து defence பண்ணுறது இந்த கேப்டன் கிட்ட இருக்கு" என்ற காரணத்தை கூறி பூந்தொட்டியில் இருந்து ஒரு பூவை சாச்சனா பறித்து செல்லும் காட்சிகளும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.
நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விட்ட நிலையில் தனது கேப்டன் பதவியை தீபக் காப்பாற்றி கொள்வாரா? சண்டை சச்சரவுகளுடன் வீட்டையே களேபரம் செய்துவரும் பொம்மை டாஸ்கில் வெல்லப்போகும் நபர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.