சினிமா

Grand Prix விருது வென்ற முதல் இயக்குநர் : யார் இந்த பாயல் கபாடியா?

Cannes திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருது வென்ற முதல் இயக்குநர் என்ற பெருமயை பாயல் கபாடியா பெற்றுள்ளார்.

Grand Prix விருது வென்ற முதல் இயக்குநர் : யார் இந்த பாயல் கபாடியா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரான்ஸ் நாட்டின் Cannes நகரில் 77 ஆவது Cannes திரைப்பட விழா நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் பாயல் கபாடியா இயக்கிய ALL WE IMAGINE IS LIGHT திரைப்படம் திரையிடப்பட்டது.

30 ஆண்டுகளுக்கு பிறகு Cannes திரைப்பட விழாவில் இந்திய படம் திரையிடப்பட்டது. இதையடுத்து பலரும் இயக்குநர் பாயல் கபாடியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் கான் திரைப்பட விழாவில், இயக்குநர் பாயல் கபாடியா கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றுள்ளார். மேலும் இந்திய இயக்குநர் வாங்கும் முதல் விருது இது என்ற பெருமைக்கும் பாயல் கபாடியோ சொந்தக்காரராக ஆகியுள்ளார். கிராண்ட் பிரிக்ஸ் விருது கான் திரைப்பட விழாவின் உயரிய விருதாகும்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவின் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இயக்குநர் பாயல் கபாடியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Grand Prix விருது வென்ற முதல் இயக்குநர் : யார் இந்த பாயல் கபாடியா?

யார் இந்த பாயல் கபாடியா?

மும்பையில் உள்ள கலைஞர் நளினி மாலினியின் மகள் பாயல் கபாடியா. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ரிஷி வேலி பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரி யில் அவர் பொருளாதாரத்தில் பட் ம் பெற்ற பிறகு, திரைப்படம் குறித்து படிக்க புனே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறு வனத்தில் சேர்ந்தார். நாட்டின் அரசி யல் மற்றும் கலை ரீதியாக புனே எப்ஐடிடியை மிகவும் சுறுசுறுப் பான வளாகங்களில் ஒன்றாக்கிய தில் பாயலின் மாணவ வாழ்க்கை முக்கிய பங்களிப்பைச் செய்துள் ளது.

2015 இல், எப்டிஐஐயில் 138 நாட்கள் நடந்த போராட்டத்தின் முக்கிய முகங்களில் ஒருவராக பாயல் இருந்தார். நாட்டின் மிகவும் மதிப்பு மிக்க திரைப்பட நிறுவனத்தின் தலைவராவதற்கு கஜேந்திர சவுகானுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை என்பதை மாணவர்கள் நன்கு அறிந்திருந்தனர். தனது அதிருப்தியை வெளிப்படுத்திய பாயல் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து வகுப்புகளை புறக்கணித்து நான்கு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தினார்.

ஆர்எஸ்எஸ் ஆதரவு நபரான கஜேந்திர சவுகானை இந்திய திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி நிறுவனத்தின் (FTII) தலை வராக நியமித்ததற்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

banner

Related Stories

Related Stories