சினிமா

பிரபல துணை நடிகர் திடீர் உயிரிழப்பு... தமிழ் திரையுலகில் தொடரும் சோகத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி !

அஞ்சாதே, முதல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்த துணை நடிகர் ஸ்ரீதர் உடல்நலக்குறைவால் காலமானார்.

பிரபல துணை நடிகர் திடீர் உயிரிழப்பு... தமிழ் திரையுலகில் தொடரும் சோகத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2008-ம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் நரேன், அஜ்மல், பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் 'அஞ்சாதே'. இந்த படத்தில் கால் பிரச்னை உள்ள மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஸ்ரீதர் என்ற துணை நடிகர். அந்த படத்தில் தன் மகன் கண் முன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படும் கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக கையாண்டு கவனத்தை ஈர்த்தார்.

பிரபல துணை நடிகர் திடீர் உயிரிழப்பு... தமிழ் திரையுலகில் தொடரும் சோகத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி !

முன்னதாக அர்ஜுன் நடிப்பில் வெளியான 'முதல்வன்' படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கும் திட்டத்தில் ஈடுபட்டிருந்தார் என்றும் கூறபடுகிறது. இப்படி ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்ரீதர், கடந்த சில மாத காலமாக உடல்நல பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று இரவு நேரத்தில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர்தான் 80, 90-களில் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர் விஜய் ஆனந்த், பெருங்குடல் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories