சினிமா

சமாதானம் பேச முயன்ற ஷகீலா... ஆத்திரத்தில் தாக்கிய வளர்ப்பு மகளின் குடும்பத்தார்... போலீசில் பரபர புகார் !

நடிகை ஷகீலாவின் வளர்ப்பு மகள், அவரை தாக்கியதாக ஷகீலா பரபரப்பான புகார் ஒன்றை போலீசில் கொடுத்துள்ளார்.

சமாதானம் பேச முயன்ற ஷகீலா... ஆத்திரத்தில் தாக்கிய வளர்ப்பு மகளின் குடும்பத்தார்... போலீசில் பரபர புகார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் பிரபல நடிகையாக அறியப்படுபவர் மலையாள நடிகை ஷகீலா. இவரை தற்போது தமிழ் திரைத்துறையில் அதிகளவில் தோன்றி வருகிறார். இதனால் தற்போது இவர் சென்னை கோடம்பாக்கத்தில் யுனைடெட் காலனி முதல் குறுக்கு தெருவில் வசித்து வருகிறார். இந்த சூழலில் ஷகீலாவின் அண்ணன் மகளான சீத்தல் என்பவரை ஆறு மாத குழந்தையிலிருந்து நடிகை ஷகீலா வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் இவரது வளர்ர்பு மகளான ஷீத்தலுக்கும், ஷகீலாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ஷகீலாவை ஷீத்தல் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் ஷீத்தல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் இந்த நிகழ்வை ஷகீலா தனது தோழிக்கு தெரிவிக்கவே, உடனே அவர் வழக்கறிஞர் சௌந்தர்யா என்பவரை அழைத்துக்கொண்டு வந்துள்ளார்.

சமாதானம் பேச முயன்ற ஷகீலா... ஆத்திரத்தில் தாக்கிய வளர்ப்பு மகளின் குடும்பத்தார்... போலீசில் பரபர புகார் !

பிறகு சௌந்தர்யா, ஷீத்தலை தொடர்பு கொண்டு ஷகீலா வீட்டுக்கு அழைத்தபோது, அவர் தனது தாயார் சசி, சகோதரி ஜமீலா ஆகியோருடன் வந்துள்ளார். அங்கே அனைவரையும் சமாதானபடுத்த முயன்றபோது ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் மீண்டும் கைகலப்பாக மாறியது. அப்போது ஆத்திரத்தில் ஷகீலாவை ஷீத்தல் அருகில் இருந்த பொருளை எடுத்து தலையில் அடித்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவரது தாயார் சசி, வழக்கறிஞரின் கையை கடித்துவிட்டு, ஷகீலாவுக்கு அனைவரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதையடுத்து இதுகுறித்து ஷகீலா தரப்பில் இருந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே அடிபட்ட ஷகீலா மற்றும் வழக்கறிஞருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. குடும்ப பிரச்னையில் ஷகீலாவை அவரது வளர்ப்பு மகளே தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories