சினிமா

பிரபல தமிழ் வசனகர்த்தா திடீர் மறைவு.. ரசிகர்கள் இரங்கல்.. திரைத்துறையில் தொடரும் சோகம் !

பிரபல எழுத்தாளரும், தமிழ் திரைப்பட வசன கர்த்தாவுமான ராசீ தங்கதுரை (53), இதய பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

பிரபல தமிழ் வசனகர்த்தா திடீர் மறைவு.. ரசிகர்கள் இரங்கல்.. திரைத்துறையில் தொடரும் சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சினிமாவில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் வசனகர்த்தா. ஒரு படத்தில் கதையுடன் சேர்ந்து வசனம் தான் மக்களை ஈர்க்கிறது. பழைய படங்கள் பலவை இன்றளவும் நின்று பேச காரணம் அந்த படங்களின் வசனங்கள்தான். அப்படி ஒரு பிரபல வசனகர்த்தாதான் ராசீ தங்கதுரை (53). இவர் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல தமிழ் வசனகர்த்தா திடீர் மறைவு.. ரசிகர்கள் இரங்கல்.. திரைத்துறையில் தொடரும் சோகம் !

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்திருக்கும் கதிர்நரசிங்கபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராசீ தங்கதுரை (53). ராமையா - சீனியம்மாள் தம்பதியின் மகனான இவர், இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட இவர், தனது பள்ளி படிக்கும் வயதிலேயே கவிதை, கதை எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். தனது பெற்றோர் மீதுள்ள அதீத பாசத்தால் அவர்கள் இருவரது பெயரிலுள்ள முதல் எழுத்தை இணைத்து 'ராசீ' என்று தனது பெயரின் முன்னாள் சேர்த்து 'ராசீ தங்கதுரை' என்று மாற்றிக்கொண்டார்.

200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதை ஆகியவற்றை தொடர்ந்து திரைப்படங்களிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2018-ம் ஆண்டு லெனின் பாரதி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்திற்கு ராசீ. தங்கதுரை வசனகர்த்தாவாக இருந்தார். இதைத்தொடர்ந்து கணேஷ் விநாயக் இயக்கத்தில் 2021-ல் வெளியான 'தேன்' என்ற படத்திலும் இவர் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார்.

பிரபல தமிழ் வசனகர்த்தா திடீர் மறைவு.. ரசிகர்கள் இரங்கல்.. திரைத்துறையில் தொடரும் சோகம் !

படத்தில் வசனம் எழுதியதோடு, சிறிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்திருந்தார். இந்த படம் பல்வேறு வென்றது. பின்னர் தாக்கல், ஆதாரம், கெவி ஆகிய படங்களிலும் ராசீ. தங்கதுரை வசனம் எழுதியுள்ளார். மேலும் சில படங்களுக்கும் ஒப்பந்தமாகியிருந்தார். இந்த சூழலில் இவருக்கு கடந்த சில மாத காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இதை பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று உயிரிழந்தார். 53 வயதான ராசீ. தங்கதுரையின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்களும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories