சினிமா

நாளை நமதே TO சகுனி.. எம்.ஜி.ஆருடன் நடித்த பழம்பெரும் நடிகர் காலமானார்.. சோகத்தில் திரையுலகம் !

பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

நாளை நமதே TO சகுனி.. எம்.ஜி.ஆருடன் நடித்த பழம்பெரும் நடிகர் காலமானார்.. சோகத்தில் திரையுலகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆந்திராவை சேர்ந்தவர் சந்திரமோகன். பிரபல நடிகரான இவர் தெலுங்கில் வெளியான 1966-ம் ரங்குல ரத்னம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், தமிழில் 1975-ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான 'நாளை நமதே' படத்தில் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடித்திருந்தார். அப்போது தமிழ் சினிமாவிலும் பிரபலமாகினார்.

நாளை நமதே TO சகுனி.. எம்.ஜி.ஆருடன் நடித்த பழம்பெரும் நடிகர் காலமானார்.. சோகத்தில் திரையுலகம் !

எனினும் தமிழில் வாய்ப்புகள் இல்லாமல், தெலுங்கில் மட்டுமே இவர் நடித்து வந்தாலும் கமல் நடிப்பில் வெளியான 'நீயா', 'தெய்வ திருமணங்கள்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதோடு இவர் இறுதியாக கார்த்தி நடிப்பில் 2012-ல் வெளியான 'சகுனி' படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு தமிழில் தோன்றாத இவர், தெலுங்கில் மட்டுமே நடித்து வந்தார்.

நாளை நமதே TO சகுனி.. எம்.ஜி.ஆருடன் நடித்த பழம்பெரும் நடிகர் காலமானார்.. சோகத்தில் திரையுலகம் !

இந்த சூழலில் தற்போது 82 வயதுடைய இவருக்கு, வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அண்மையில் இவருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் ஐதராபாதத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கே இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இவரது மறைவுக்கு தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஐம்பது ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த இவரது மறைவு ஈடு செய்ய முடியாதது என சக நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories