சினிமா

விளைவுகளை அனுபவிக்குமா மாயா குழு.. இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் ? பரபரப்பாகும் பிக்பாஸ் !

விளைவுகளை அனுபவிக்குமா மாயா குழு.. இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் ? பரபரப்பாகும் பிக்பாஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய், யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகியோர் வெளியேற்றபட்டனர். இதையடுத்து கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி பிக்பாஸ் வீட்டில் வைல்கார்ட் என்ட்ரியாக அர்சனா, தினேஷ், கானா பாலா, ஆர்.ஜே.பிராவோ, அன்ன பாரதி ஆகியோர் வந்தனர்.

வீட்டிற்குள் வந்த உடனேயே பூர்ணிமாவின் கேப்டன்சியில் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அர்ச்சனா வாரம் முழுவதும் எதோ ஒரு காரணத்திற்காக கண்ணீரும் கம்பலயுமாக காணப்பட்டார். இதனிடையே கடந்த வார இறுதியில் போட்டியாளர்களால் உரிமை குரல் எழுப்பப்பட்டு, பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

பெண்களின் safety ஐ காரணமாக்கி பிரதீப் வெளியேற்றப்பட்டது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. பிரதீப்பை தொடர்ந்து குறைந்த வாக்குகள் பெற்ற அன்னபாரதியும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். போன வாரம் நடைபெற்ற கேப்டன்ஸி டாஸ்கில் மாயா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். மாயாவின் கேப்டனேசி இந்த வாரம் சற்று கடுமையாகவே இருந்தது. ஒரு கேப்டனாக போட்டியாளர்களின் நிறை குறைகளை அறிந்திருக்க வேண்டிய மாயா, அவை எதை பற்றியும் கவலைகொள்ளாமல், அனைவரிடமும் சண்டைக்கு செல்வதையே குறிக்கோளாக வைத்து செயல்பட்டார்.

விளைவுகளை அனுபவிக்குமா மாயா குழு.. இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் ? பரபரப்பாகும் பிக்பாஸ் !

குறிப்பாக விசித்ரா மற்றும் அர்ச்சனாவிடம், மாயா குழுவில் இருந்த அனைவருமே பெரும் அளவில் தகராறில் ஈடுபட்டதை காண முடிந்தது. அதற்கு ஏற்றாற்போல் பிக்பாஸும் போட்டியாளர்களின் சுயரூபத்தை வெளிகொண்டு வரும் வகையில் டாஸ்குகள் வழங்கினார். மாயாவின் கேப்டன்சியில் விசித்திரா, ரவீனா, மணி, தினேஷ் மற்றும் அர்ச்சனா ஆகியோர் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மேலும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு என போட்டியாளர்கள் கேப்டன் மாயாவால் நியமிக்கப்பட்டிருந்தனர். நாமினேஷன் பற்றி போட்டியாளர்கள் கலந்துரையாடக்கூடாது என போன வாரம் கமல் கூறி இருந்தார்.

இதையடுத்து போன வாரம் பிராசஸில், விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, ஐஷூ, பூர்ணிமா மற்றும் பிராவோ ஆகியோர் நாமினேஷனில் இடம் பெற்றனர். நாமினேஷன் ப்ராசஸில்ரெட் கார்டையும் காரணமாக கூறி இருந்ததால் 'பெண்கள் பாதுகாப்பு என்பது முக்கியமான விஷயம்' என மாயா ஸ்மால் பாஸ் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பூர்ணிமா, ஐஷு, நிக்சன், ஜோவிகா என ஒருவர் பின் ஒருவராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அர்ச்சனாவிடம் 'நீ அழப் போகலையா?' என்று மாயா கேட்டதும், நான் அழுறத கிண்டல் பண்ணுறாங்க, இவங்களுக்கு எல்லாம் அழுகையே வராதா என்று அர்ச்சனா ஆதங்கப்பட்டார்.

ரவீனாவிடம் பேசி கொண்டிருந்த விசித்ரா 'ப்ரதீபிடம் உனக்கு பிரச்னை இருந்தா நீ ஏன் அப்போவே சொல்லல?' என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து “ஒரு பெண்ணை ரேப் செய்தால் கூட உடனே சென்று புகார் சொல்லணும். இல்லனா காயம் உள்ளிட்ட ஆதாரங்கள் அழிந்துவிடும்” என்று விசித்ரா கூறியது அனைவரிடத்திலும் முகச் சுளிப்பை ஏற்படுத்தியது.

விளைவுகளை அனுபவிக்குமா மாயா குழு.. இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் ? பரபரப்பாகும் பிக்பாஸ் !

இதனிடையே ஷாப்பிங் செய்யும் டாஸ்க் தொடங்கியது. அதில் மாயா மற்றும் அர்ச்சனா ஷாப்பிங் சென்றனர். மணிதான் தன்னுடன் வரவேண்டும் என்று மாயா தொடர்ந்து கூறி வர, திடீரென அர்ச்சனாவை களத்தில் இறங்கியதும் சண்டை போட காட்டிய ஆர்வத்தை என்னென்ன பொருட்கள் வேண்டும் என கூற மறந்து விட்டனர் பிக்பாஸ் வீட்டார். விளைவு எண்ணெய் எடுக்கவில்லை. சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டில் கமல் பிறந்தநாள் தொடர்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் மாயா மற்றும் கானா பாலா வெற்றி பெற்று கோல்ட் ஸ்டார் வென்றனர்.

இதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு செக்மேட் வைக்கும் வகையான டாஸ்க் கொடுத்தார். அதில், திரையில் வரும் வார்த்தையை யார் சொன்னது என தெரிவிக்க வேண்டும் அத்துடன் ஏன் சொன்னார்கள் என்ற விளக்கத்தையும் அவர்கள் தர வேண்டும். அதில் வெளியேறிய போட்டியாளரான வினுஷா குறித்து நிக்சன் சொன்ன விஷயம் போட்டியாளர்களிடையே முக சுளிப்பை ஏற்படுத்தியது. அதே போல பெண்களின் பாதுகாப்பை பற்றி தொடர்ந்து பேசி வரும் மாயா குழுவினர், பிராவோ குறித்து பேசி இருந்ததும் அவர்களின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்தது.

விளைவுகளை அனுபவிக்குமா மாயா குழு.. இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் ? பரபரப்பாகும் பிக்பாஸ் !

எனினும் பிரதீப் பேசியது தவறு என்றும் ஆனால் தாங்கள் பேசியது விளையாட்டு என்றும் மாயா, பூர்ணிமா, ஐஷூ தங்களின் கருத்துக்கு ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம் ஒன்றையும் வைத்தனர். Jovika is spoiling her life என்ற ஒரு statement. இதை விசித்ரா தான்தான் சொல்லியதாக நினைத்துக் கொண்டு ஒரு விளக்கமளித்தார். ஆனால் அதை அர்ச்சனா சொன்ன வாக்கியம் என பிக்பாஸ் கூற, அர்ச்சனாவும், விசித்ராவும் ஒரே மாதிரியான விளக்கங்களை கொடுத்தனர். மாயா குழு அர்ச்சனா மற்றும் விசித்ராவிடம் சண்டையிட புது புது காரணங்களை கண்டு பிடித்து வந்தனர்.

இந்த வரிசையில், ஜோவிகா எமோசனலாக இருக்கும் பொழுது சிரிக்காதீங்க விசித்தரா என ஐஷு வெடிக்க தொடங்கினார். இதில், என்னோட எமோஷனல் பிரச்சினையை வச்சு நீங்கள் சிரித்தீர்களே என தனது தரப்பு வாதத்தை முன் வைத்தார் அர்ச்சனா. அர்ச்சனாவிடம் தனது ஆவேசமான சொற்களை ஐஷு வெளிப்படுத்தினார். அப்போது மரியாதை இன்றி பேசிய மாயா ஐஷுவிடம் நீங்க, வாங்க, போங்க மரியாதை முக்கியம் என அர்ச்சனா நிறுத்தியது பாராட்டுக்குரியது.

விளைவுகளை அனுபவிக்குமா மாயா குழு.. இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் ? பரபரப்பாகும் பிக்பாஸ் !

பிக்பாஸ் வீட்டில் மரியாதையை இல்லை என அனைவர்க்கும் தெரிந்த ஒன்றை வெளியே நிகழ்ச்சியை நன்றாக கவனித்து விட்டு யார்யாரிடம் எவ்வாறு பேச வேண்டும் என அர்ச்சனா முன்னரே முடிவு செய்து விட்டு வந்ததது போல இந்த வாரம் செயல்பட்டார். இதன் தொடர்ச்சியாக இந்த வாரம் BB Court டாஸ்க் நடைபெற்றது. இதில் முதல் வழக்கை பூர்ணிமா மீது விஷ்ணு தொடுத்தார். அந்த வழக்குக்கு ரவீனா நீதிபதி. இதில் விஷ்ணுவுக்கே வெற்றி. இதையடுத்து, பூர்ணிமா மற்றும் விசித்திராவிடையே shopping டாஸ்கில் பொருட்களை எடுக்க அர்ச்சனாவை அனுப்பியது குறித்து வழக்கு தொடுத்தார். இதற்கு நிக்சன் நீதிபதியாக செயல்பட்டு விசித்ரா தரப்பிற்கு வெற்றியை அறிவித்தார்.

தொடர்ந்து, மாயா மீது தினேஷ் வழக்கு தொடுத்தார். பெண்களின் பாதுகாப்பு பற்றிப் பேசும் இடத்தில் ஆண்களின் பாதுகாப்பு இல்லை என்பதுதான் வழக்கு. இதற்கு நீதிபதியாக இருந்த பிராவோ, மாயாவின் செயல் பார்வையாளர்களுக்கு தவறாகத் தெரியும் என்கிற அடிப்படையில் தினேஷுக்கு வெற்றி என அறிவித்தார். இந்த டாஸ்கின் இறுதியில் விஷ்ணு, விசித்ரா, தினேஷ், மணி ஆகியோருக்கு தலா ஒரு ஸ்டார் கிடைத்தது. மேலும், சிறந்த நீதிபதியாக விஷ்ணு தேர்வு செய்யப்பட்டு அவருக்கும் ஒரு ஸ்டார் வழங்கப்பட்டது.

பிரதீப் வெளியே அனுப்பப்பட்டது பிக்பாஸ் வீட்டிற்குள்ளும், பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே பார்வையாளர்களிடையேவும் பேசு பொருளாகவே இருந்து வந்தது. இதனிடையே மாயாவின் சுயரூபத்தையும் பிற போட்டியாளர்களின் சுயரூபத்தையும் டாஸ்க் என்ற பெயரில் பிக்பாஸே வெளி கொண்டுவந்தார். மேலும், பூர்ணிமாவை தோற்கடிச்சா என்னைத் தோற்கடித்து விடலாம் என மாயா அடிக்கடி கூறி வந்தார். அதற்கேற்றார் போல, இந்த கேரக்ட்டர் இல்லாம அந்தக் கேரக்ட்டர் இருக்காது. ஆனா அது இல்லாம இது இருக்கும் என அர்ச்சனாவும் கூறி வந்தார். இதனால் மாயாவை டார்கெட் செய்து பூர்ணிமா வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

விளைவுகளை அனுபவிக்குமா மாயா குழு.. இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் ? பரபரப்பாகும் பிக்பாஸ் !

இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) போட்டியாளர்களை சந்தித்த தொகுப்பாளர் கமல், தானாக பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுக்கவில்லை, தனக்கு இருந்த அதிகாரத்தை உங்களிடம் (போட்டியாளர்களிடம்) கொடுத்தேன். நீங்கள்தானே ரெட் கார்டு வழங்க வேண்டும் என கூறினீர்கள் என்று விளக்கமளித்தார். உங்களின் குற்றச்சாட்டுகள் உண்மையா என கேள்வி எழுப்பி இருந்த கமல், உங்களுடன் என்னையும் player ஆக சேர்த்துகொண்டது போல் உள்ளது, i'm not a player, i'm a observer என்றும் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து போட்டியாளர்கள் எதற்கு எடுத்தாலும் கமலை தங்களுடன் சேர்த்துக்கொண்டதற்கும், பிரதீப்க்கு ரெட் கார்டு வழங்குவதற்கு முன்னர் என நடந்தது யார் யார் ரெட் கார்டு வழங்க தயாராக இருந்தனர் என 4 விதமாக குறும்படங்கள் நேற்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்றது. இதில் முக்கியமானது, மாயா குழுவினர் பேசி கொண்டிருந்த போது பூர்ணிமா கூறிய வார்த்தைகள். "அதுதானே நம்முடைய வழக்கம், எதையாவது பன்னிட்டு weekend போயிட்டு கமல் sir கழுவி கழுவி ஊதுவாரு sorry sirனு சிரிச்சுட்டே சொல்லுறது."

இந்த குறும்படங்கள் அனைத்தையும் போட்டியாளர்களுக்கு போட்டு காண்பித்த கமல், நடந்ததை சொல்லி அதற்கான விளைவுகளை அவர் அனுபவித்தார், அதே போல நாடகத்தை சொல்லி இருந்தால் அதற்கான விளைவுகளை நீங்களும் அனுபவிப்பீர்கள் என போட்டியாளர்களை எச்சரிக்கை செய்தார். மேலும் பிக்பாஸ் வீட்டில் கடுமையாக நடந்து கொண்ட கேப்டன் மாயாவை கமல் எச்சரிப்பாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர் ஐஷு வெளியேற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

- சீ. ரம்யா.

banner

Related Stories

Related Stories