சினிமா

அதிரடியாக வெளியேறிய பிரதீப்: போட்டியாளர்களுக்கு அல்வா கொடுத்த கமல் : சூடு பிடிக்க ஆரம்பித்த ஆட்டம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் பிரதீப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில் தொகுப்பாளர் கமலால் ரெட் கார்டு வழங்கப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதிரடியாக வெளியேறிய பிரதீப்: போட்டியாளர்களுக்கு அல்வா கொடுத்த கமல் : சூடு பிடிக்க ஆரம்பித்த ஆட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரம் 5 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரியாக 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.

அப்போது ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பும் நபர்கள் கேப்டனால் தேர்வு செய்யப்பட்டனர். வைல்ட் கார்டு போட்டியாளர்களான தினேஷ், அன்னபாரதி, பிராவோ, பாலா, அர்ச்சனா ஆகிய 5 பேரையும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்த கேப்டன் பூர்ணிமா, அவர்களை சமாளிக்க கூடவே 6-வது நபராக விச்சித்ராவையும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதனால் ஸ்மால் பாஸ் வீட்டின் மொத்த பொறுப்பும் விசித்திராவின் வசம் இருக்கும் என்று பிக்பாஸ் வீட்டார் எண்ணி இருந்தனர்.

அதிரடியாக வெளியேறிய பிரதீப்: போட்டியாளர்களுக்கு அல்வா கொடுத்த கமல் : சூடு பிடிக்க ஆரம்பித்த ஆட்டம்!

இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. அதில், தினேஷ், அர்ச்சனா, அன்னபாரதி, பிராவோ, பாலா, மணி, அக்ஷயா, ஐஷு மற்றும் மாயா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். வீட்டிற்குள் வந்த உடனேயே தான் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டது, தன்னை யாரும் சரியாக வரவேற்கவில்லை போன்ற காரணங்களால் போட்டியாளர் அர்ச்சனா சற்று சோர்வுடன் காணப்பட்டு வந்தார். அத்துடன் தனது கருத்தை முன் வைத்து பிக்பாஸ் வீட்டாருடன் வாக்கு விதத்திலும் ஈடுபட்டார்.

இவர்கள் உள்ளே நுழைந்தபோது தான், யுகேந்திரன் எவிக்ட் ஆகி வெளியே சென்றார் நாங்கள் அனைவரும் அந்த சோகத்தில் இருந்தோம் என்று அர்ச்சனாவின் குற்றச்சாட்டுக்கு போட்டியாளர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. எனினும், இந்த ஆட்டத்தை கொஞ்சமாவது மனிதாபிமானத்தோடு ஆடுங்கள் என்று அர்ச்சனா தொடர்ந்து பிக்பாஸ் வீட்டாருடன் சச்சரவில் ஈடுபட்டு வந்தார். ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை டார்கெட் செய்து தூக்க வேண்டும் என்று பிரதீப் போட்ட திட்டத்தில் பிராவோவை அக்ஷயா காதலிப்பது போல நடிக்க வேண்டும் என்ற விபரீதமான திட்டங்களும் இடம்பெற்று இருந்தன.

பிரதீப்பின் இந்த குதர்க்கமான திட்டங்களை வெகு சுலபமாக புரிந்து கொண்ட பிக்பாஸ் வீட்டார் சுதாரித்து கொண்டனர். இதனிடையே, 'தோத்தவங்க துடைக்கணும், கழுவப் போறது யாரு' போன்ற வழக்கமான டாஸ்க்குகளில் பிக்பாஸ் வீட்டார் வெற்றி பெற்றனர். 'நான்தான் இந்த கேமை சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறேன்' என்று நினைத்து கொண்டிருந்த பிரதீப் வசமாக சிக்கிய தருணமே "அசைஞ்சா போச்சு" டாஸ்க். கோல்டன் ஸ்டாருக்கான இந்த டாஸ்கில் போட்டியாளர்களின் தலையில் ஒரு கொம்பு மாட்டிவிடப்பட்டு நுனியில் ஒரு மணியும் இடம் பெற்றது.

அதிரடியாக வெளியேறிய பிரதீப்: போட்டியாளர்களுக்கு அல்வா கொடுத்த கமல் : சூடு பிடிக்க ஆரம்பித்த ஆட்டம்!

இதில், பஸ்ஸர் அடித்த பின்னர் சத்தம் வந்தால் அவர்கள் அவுட் என்றும், அவுட் ஆனவர்கள் மற்றவர்களைத் தொடாமல் தொந்தரவு செய்து அவுட் ஆக்க முயற்சிக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்த போட்டியில் பிரதீப் அவுட் என்று கூல் சுரேஷ் சுட்டி காட்ட 'நான் நேர்மையாக ஆடிக்கொண்டிருக்கிறேன்' என்று கூல் சுரேஷிடம் பிரதீப் குரல் உயர்த்தி பேசினார். தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்த பிரதீப் 'ஒருவேளை என்னை அவுட்டு என்று சொன்னால் மற்றவர்கள் விளையாடும் போது மிளகாய்ப் பொடி ஊதுவேன்' என்று கூறியது போட்டியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

'சமயத்துல யோசிக்காமல் வார்த்தைகளை விட்டுடறீங்க பிரதீப்' என்று கமல் ஏற்கனவே பிரதீப்பை எச்சரிக்கை செய்திருந்ததை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. இந்த டாஸ்கின் இறுதியில் விச்சித்ரா வெற்றி பெற்றார். எனினும் பிரதீப், கூல் சுரேஷிடம் நடந்து கொண்ட விதத்தை கண்டித்த ஜோவிகா, 'ஒவ்வொரு முறையும் தவறு செய்து விட்டு ஸாரி சொல்ல முடியாது' என்று எச்சரித்தார். அப்போது “இந்த முறை ஸாரி கேட்க மாட்டேன்” என்று பிரதீப் கூறினார்.

இதனால் பிரதீப் மற்றும் கூல் சுரேஷை சமரசம் செய்யும் முயற்சியில் பிக்பாஸ் ஈடுபட்டார். "பிக் பாஸ் டேலன்ட் ஷோ" என்ற கலை நிகழ்ச்சிக்கு கேப்டன்களாக இருவரையும் நியமித்தார். ஆனால் அதிலும் பிரதீப் பின்வாங்கவே, கூல் சுரேஷ் மற்றும் மாயா தலைமையில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிரடியாக வெளியேறிய பிரதீப்: போட்டியாளர்களுக்கு அல்வா கொடுத்த கமல் : சூடு பிடிக்க ஆரம்பித்த ஆட்டம்!

இதில், ஐஷூவும், ரவீனாவும் பெண்களின் மீதான பாலியல் சீண்டல், வன்முறை போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக நடனம் ஆடினர். "NO MEANS NO" என்ற செய்தியை இந்த நிகழ்ச்சி சரியாக வெளிப்படுத்தியதாக விச்சித்ரா பாராட்டினார். மேலும் 'பெண் பிள்ளைகளை பொத்தி வளர்ப்பதை விடவும், ஆண் பிள்ளைகளுக்கு புத்தி சொல்லி வளர்க்க வேண்டும்' என்று அன்னபாரதி அறிவுரை கூறினார்.

இதன் தொடர்ச்சியாக ஷாப்பிங் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக 'சந்துல பொந்துல மாட்டிக்காத' என்ற டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கிற்கு மேற்பார்வையிட ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து விச்சித்ராவும், கானா பாலாவும் சென்றிருந்தனர். மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் இந்த டாஸ்கில் பிக்பாஸ் வீட்டார் வெற்றி பெற்றனர். ஆனால் மேற்பார்வையிட விச்சித்ராவும், கானா பாலாவும் சென்றபோது தன்னிடம் கேட்கவில்லை என்று கூறி அர்ச்சனா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அர்ச்சனாவின் தொடர் வாக்குவாதத்தில் விரக்தி அடைந்த விச்சித்ரா, கிட்சன் வழியே பிக்பாஸ் வீட்டிற்குள் எகிறி குதித்தார். விச்சித்திராவின் இந்த செயலால் ஸ்மால் பாஸ் வீட்டில் gas அணைக்கப்பட்டது. 'அங்க எல்லாரும் maturity இல்லாம இருகாங்க' என்று கோபப்பட்டு பேசிய விச்சித்ரா, 'ஒரு விஷயத்துக்கு எவ்வளவு நேரம்தான் பேசுவ?' என்று அர்ச்சனாவிடம் சலித்து கொண்டார். 'என் உரிமையை தானே நான் கேட்டேன்' என்று மீண்டும் வாக்குவாதம் செய்த அர்ச்சனா அழ தொடங்கினார்.

ஷாப்பிங் செலவைக் கட்டுவதற்கான அடுத்த டாஸ்க் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்றது. இந்த டாஸ்கில் பிக்பாஸ் வீட்டார் தோற்றால் ஒருவர் சிறை செல்ல வேண்டும் என்று கூறப்பட்டது. ஏற்கனவே அர்ச்சனா வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இந்த முறை மேற்பார்வையிட அர்ச்சனாவே ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டார். இந்த டாஸ்கில் பிக்பாஸ் வீட்டார் தோற்றதால் அக்ஷயா தேர்ந்தெடுக்கப்பட்டு சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அதிரடியாக வெளியேறிய பிரதீப்: போட்டியாளர்களுக்கு அல்வா கொடுத்த கமல் : சூடு பிடிக்க ஆரம்பித்த ஆட்டம்!

இதனிடையே, “எனக்கு மன்னிப்பு கேட்கத் தோன்றவில்லை. பெல் அடிச்சதா, இல்லையா என்ற உண்மை தெரிய வேண்டும். கமல் என்னை வெளியே போகச் சொன்னால் ஒரு பிரச்னையும் இல்லை” என்றெல்லாம் பேசி வந்த பிரதீப் திடீரென “கமல் சொன்னால் மன்னிப்பு கேட்பேன்” என்று சொல்ல இந்த வாரம் உரிமை குரல் எழுப்ப வேண்டும் என போட்டியாளர்கள் முடிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுமையாகப் பங்கெடுத்துக் கொண்ட இரண்டு நபர்களைத் தேர்ந்தெடுக்கும்படி பிக்பாஸ் கூறினார்.

அதில் மாயாவும், கூல் சுரேஷும் போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது கேப்டன்சி டாஸ்க் என பின்னர் அறிவித்த பிக்பாஸ், ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து ஒரு நபரை தேர்ந்தெடுக்கும்படி கூறி twist வைத்தார். "பேஸ்மென்ட் வீக்" என்ற இந்த டாஸ்கில் மாயா, கூல் சுரேஷ் மற்றும் விச்சித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் மாயா வெற்றி பெற்று அடுத்த வாரத்திற்கான கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பியதால் தினம் தினம் ஏதோ ஒரு காரணத்தை கூறி அழுதுகொண்டிருந்த அர்ச்சனா, ஒரு கட்டத்தில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கவே எனக்கு பிடிக்கவில்லை, ஒரு காபி கூட நிம்மதியாக குடிக்க முடியவில்லை என்று பல காரணங்களை கூறி மீண்டும் அழ தொடங்கினார். இந்த பிரச்னையை சமாளிக்க அர்ச்சனாவை மெயின் கேட் அருகே அழைத்து வந்து அவரை சமாதானம் செய்த கேப்டன் பூர்ணிமா, பின்னர் பிக்பாஸின் கோபத்திற்கும் ஆள் ஆனார்.

அதிரடியாக வெளியேறிய பிரதீப்: போட்டியாளர்களுக்கு அல்வா கொடுத்த கமல் : சூடு பிடிக்க ஆரம்பித்த ஆட்டம்!

வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வந்ததில் இருந்து மோதல், அழுகை, சிரிப்பு, கோபம், குற்றச்சாட்டு என பரபரப்பாக நடந்து வந்த பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களை நேற்று தொகுப்பாளர் கமல் சந்தித்தார். கமல் வந்ததுமே மாயா, விஷ்ணு, பூர்ணிமா உள்ளிட்டோர் உரிமை குரல் உயர்த்தினர். இதில் தகாத வார்த்தை பேசுகிறார், எல்லை மீறுகிறார், இரவில் தூங்க பயமாக உள்ளது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பிரதீப் மீது வைக்கப்பட்டது. பின்னர் பிரதீப் தரப்பு வாதத்தை கேட்ட கமலிடம், கதவை திறந்து வைத்து கொண்டே பிரதீப் சிறுநீர் கழித்ததாக மணி வைத்த குற்றச்சாட்டுக்குப் பிறகு பிரதீப்பிடம் 'உங்கள் பதில் வேண்டாம். உட்காருங்கள்' என்று கூறி விட்டார்.

அதிரடியாக வெளியேறிய பிரதீப்: போட்டியாளர்களுக்கு அல்வா கொடுத்த கமல் : சூடு பிடிக்க ஆரம்பித்த ஆட்டம்!

இதையடுத்து பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பி விடலாமா அல்லது போட்டியில் தொடரலாமா என்று பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் அனைவரிடம் தனித்தனியாக அழைத்து கமல் விசாரித்தார். இதில் அர்ச்சனா, விச்சித்ரா, அண்ணா பாரதி, கூல் சுரேஷ், தினேஷ் ஆகியோர் தவிர்த்து அனைத்து போட்டியாளர்களும் அவருக்கு ரெட் கார்டு வழங்கி வெளியேற்ற வேண்டும் என கூறினர். இதனால், பிரதீப் நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களிடம் பேசிய கமல், women safety முக்கியம். என்னுடைய நிலைப்பாடும் இதுதான். பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் சமூகம்தான் நல்ல சமூகம். அந்த பாதுகாப்பை நாம் தர மறந்தாலோ அல்லது மறுத்தாலோ அவர்கள் தூக்கி எறியப்பட வேண்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில் போட்டியாளர்களை சந்தித்த கமல் பாகற்காய் அல்வாவை காட்டி இதற்கு தகுதியானவர் யார் என வினவினார். இதில் மாயா, பூர்ணிமா மற்றும் அர்ச்சனா ஆகியோருக்கு அல்வா கொடுப்பது தெரிகிறது.

சீ. ரம்யா.

banner

Related Stories

Related Stories