சினிமா

பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக 5 பேர் : முதல் நாளே பற்றி எரியும் பிக்பாஸ் வீடு... இவ்வளவு நடந்ததா?

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கும், புதியதாக வீட்டிற்குள் சென்றவர்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்பட போகிறதா - இரு அணியாக செயல்பட போகின்றனரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக 5 பேர் : முதல் நாளே பற்றி எரியும் பிக்பாஸ் வீடு... இவ்வளவு நடந்ததா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரண்டு வீடுகள் அமைக்கப்பட்டு இந்த முறை போட்டிகள் சற்று வித்தியாசமாகவே நடைபெற்று வருகிறது. இதில் மணி, யுகேந்திரன், ஜோவிகா, நிக்சன், பிரதீப் மற்றும் அக்ஷயா ஆகியோர் கேப்டன் பூர்ணிமாவால் தேர்வு செய்யப்பட்டு ஸ்மால் பாஸ் வீட்ற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 7வது சீசனில் முதல் முறையாக சென்ற வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது.

இதில், பிரதீப், நிக்சன், யுகேந்திரன், ஜோவிகா, மணி, அக்ஷயா, கூல் சுரேஷ், வினுஷா, விக்ரம், மாயா மற்றும் விஷ்ணு ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். சிலபல சுவாரசியமான நிகழ்வுகள் சென்ற வாரம் பூர்ணிமாவின் கேப்டன்சியில் நடைபெற்றது. வீட்டை சுத்தம் செய்யும் பணிக்கான டாஸ்கில் ஸ்மால் பாஸ் வீடு வெற்றி பெற்றது.

பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக 5 பேர் : முதல் நாளே பற்றி எரியும் பிக்பாஸ் வீடு... இவ்வளவு நடந்ததா?

பாத்ரூம் சுத்தம் செய்யும் டாஸ்கில் பிக்பாஸ் வீடு வெற்றி பெற்றது. கடந்த வாரம் ஸ்மால் பாஸ் தனது வீட்டு உறுப்பினர்களுக்காக யூனிபார்ம் வழங்கி இருந்தார். மேலும் கேப்டன்சியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக, ஸ்மால் பாஸ் வீட்டாருக்கு நாற்காலிகளை வழங்கிய பூர்ணிமாவை பிக்பாஸ் பாராட்டி இருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் நடந்த ‘பேட்டரி டெட்’ டாஸ்கில் விஷ்ணு தடுக்கி கீழே விழ பழியை அக்ஷயா மீது போட்டார். மேலும் அக்ஷயாவிடம் குரல் உயர்த்தி ஆவேசமாக பேசிய இருந்த விஷ்ணு ஒரு கட்டத்தில் கையை வேகமாகத் தட்டி விட்டார். இந்த செயல் கண்டிக்கும் விதமாக அமைந்தது. அடுத்ததாக கோல்டன் ஸ்டார் டாஸ்க்கை ஆரம்பித்த பிக் பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பேசும் வீடியோவை போட்டு காட்டினார். இதில், அதிக வாக்குகள் பெற்று ப்ரதீப் வெற்றி பெற்றார். எல்லா சீசனிலும் ராங்கிங் டாஸ்க் பரபரப்பாகவே நடைபெறும். அதே போல இந்த சீசனும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டைட்டில் எனக்கு வேண்டும் அதில் வரும் பணத்தை நீங்கள் வைத்து கொள்ளுங்க என்று மாயா, ப்ரதீபிடம் டீல் பேசினார். முதல் இடம் மாயா அல்லது ப்ரதீபிற்குதான் என வீட்டில் அனைவரும் முடிவு செய்து விட்டனர் என நினைக்கத்தோன்றுகிறது. முதலிடத்திற்கு பிரதீப், மாயா தவிர்த்து ஜோவிகா போட்டியிட்டார். இதில் மாயா, விக்ரம், நிக்சன், யுகேந்திரன், ஜோவிகா, மணி, ரவீனா, ஐஷு, விசித்ரா, வினுஷா, கூல் சுரேஷ், பூர்ணிமா, விஷ்ணு மற்றும் பிரதீப் ஆகியோர் வரிசையாக நின்று டாஸ்கை முடித்து வைத்தனர்.

வார இறுதியில் பிக்பாஸ் வீட்டாருடன் கலந்துரையாடி கமல்ஹாசன், 'பட்டரி டெட்' டாஸ்க் குறித்து போட்டியாளர்களிடம் விசாரிக்க தொடங்கினார். விஷ்ணுவை தள்ளி விட்டது யார் என்று போட்டியாளர்களிடம் கேட்ட கமல், 'பாட்டரி டெட்' டாஸ்கில் வெற்றி பெற்ற ஜோவிகாவை பாராட்டியும் இருந்தார். விஷ்ணு கிழே விழுந்தது குறித்து அக்ஷயாவின் கருத்தையும் கேட்டு விசாரித்து கொண்ட கமல் என்ன நடந்து என்பதை காண குறும்படமும் போட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக 5 பேர் : முதல் நாளே பற்றி எரியும் பிக்பாஸ் வீடு... இவ்வளவு நடந்ததா?

குறும்படத்தில் அக்ஷயாவை விஷ்ணு தள்ளி விட்டு ஓட முயன்றது தெளிவானது. அத்துடன் விஷ்ணு ஐஷூவின் கால்களில் சிக்கி கிழே விழுந்ததும் உறுதியானது. விஷ்ணு, அக்ஷயாவிடம் ஆவேசமாக நடந்து கொண்டதை சுட்டி காட்டிய கமல் விஷ்ணுவை கடுமையாக கண்டித்தார். தொடர்ந்து ராக்கிங் டாஸ்க் பற்றிய பேசிய கமல் ராக்கிங் டாஸ்கை புரிஞ்சிக்கிட்டுதான் ஆடினீங்களா? ஏழை பணக்காரன் என்பது எல்லாம் எப்படி இங்க வந்தது? என்றும் கேள்வி எழுப்பினார்.

”என்கிட்ட கூடத்தான் நெறய செருப்பு இருக்கு ஆனா நா செருப்பே இல்லாம கடந்து வந்த பாதையும் இருக்கு” என்று பிரதீப், ஜோவிகாவிடம் பேசியதை சுட்டி காட்டி விளக்கமளித்தார். இதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. அதில், இந்த வாரமும் பூர்ணிமா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களை சந்தித்த தொகுப்பாளர் கமல், இதுபோல் முன்பு நிகழ்ந்ததாக தெரியவில்லை என்று குறிபிட்டு இரண்டாவது முறையாக கேப்டனான பூர்ணிமாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக 5 பேர் : முதல் நாளே பற்றி எரியும் பிக்பாஸ் வீடு... இவ்வளவு நடந்ததா?

அடுத்ததாக வைல்ட் கார்டு போட்டியாளர்களை அறிமுகம் செய்த கமல், முதலாவதாக தினேஷை அறிமுகப்படுத்தினார். இவர் ஒரு சீரியல் நடிகை. இவரை தொடர்ந்து இரண்டாவதாக பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். போட்டியாளர்கள் அதிகரித்து கொண்டே சென்றதால் சற்று அனைவரும் திகைப்பில் ஆழ்த்த சமயத்தில் போட்டியாளர்களை சந்தித்த கமல் குறைவான வாக்குகள் பெற்று யுகேந்திரன் வெளியேறுவதாக அறிவித்தார். இதனிடையே, மூன்றாவது வைல்ட் கார்டு போட்டியாளராக சீரியல் நடிகை அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

தொடர்ந்து அடுத்தடுத்த வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே சென்றதால் சற்று பரபரப்படைந்த பிக்பாஸ் வீட்டிற்கு நான்காவது வைல்டு கார்டு என்ட்ரி ஆர்.ஜே.பிராவோ. அவரை தொடர்ந்து ஐந்தாவது வைல்டு கார்ட் என்ட்ரி ‘கானா பாலா’. சினிமா பாடல்கள் மூலம் பிரபலமடைந்த 'கானா பாலா’வை பலருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் இவர் பிக்பாஸ் வந்ததன் மூலம் மாஸ்டர் டிகிரி முடித்தவர், வக்கீல் படிப்பு படித்தவர், கல்லூரியில் வைஸ் சேர்மன், மூன்று முறை தேர்தலில் நின்று இரண்டாவது இடத்திற்கு வந்தவர் என்ற பல சுவாரசியமாக தகவல்கள் தெரிய வந்தது.

பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக 5 பேர் : முதல் நாளே பற்றி எரியும் பிக்பாஸ் வீடு... இவ்வளவு நடந்ததா?

5 வைல்ட் கார்டு போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்த கமல், இந்த சர்ப்ரைஸ் போதுமா என்று கேள்வி எழுப்பியதுடன், போட்டியாளர்கள் அனைவரையும் ஒன்றாக அமரும் படி கூறினார். இதனால் டபுள் எவிக்ஷன் இருக்கலாம் என்பதை போட்டியாளர்கள் ஒருவாறு யூகித்து இருந்தனர். அவர்களின் யூகம் உண்மையாகும் வகையில் வினுஷா ஏவிக்ட் ஆவதாக கமல் அறிவித்தார்.

இதனால் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கும், புதியதாக வீட்டிற்குள் சென்றவர்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்பட போகிறதா அல்லது இரு அணியாக செயல்பட போகின்றனரா என்பது போன்ற கேள்விகள் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இதனிடையே இன்று கேப்டன் பூர்ணிமா யாரையெல்லாம் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பினார் என்று தெரியவந்துள்ளது.

இதில்,புதிதாக வந்த வைல்டு கார்டு போட்டியாளர்களான பிராவோ, அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, அன்ன பாரதி ஆகியோருடன் விசித்ராவையும் தேர்வு செய்துள்ளார் கேப்டன். இதனால் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்த முதல் நாளே பிக்பாஸ் வீடு பரபரப்படைந்துள்ளது.

- சீ. ரம்யா

banner

Related Stories

Related Stories