சினிமா

BIGGBOSS: இது நிஜ சண்டை இல்லை; பரபரப்பை கிளப்பிய கமல்ஹாசன்; ஆரம்பிக்கலாங்களா?

Content கொடுப்பதற்காக Strike செய்ததாக ஸ்மால் பாஸ் வீட்டார் தொகுப்பாளர் கமல்ஹாசனிடம் கூறியது ரசிகர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

BIGGBOSS: இது நிஜ சண்டை இல்லை; பரபரப்பை கிளப்பிய கமல்ஹாசன்; ஆரம்பிக்கலாங்களா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. பிக் பாஸ் வீடு, ஸ்மால் பாஸ் வீடு என்ற இரண்டு வீடு கான்சப்டுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தனர். இதில், முதல் வாரம் நடைபெற்ற நாமினேஷன் பிராசஸில் போட்டியாளர் அனன்யா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீடு 17 போட்டியாளர்களுடன் 2 வது வாரத்திற்கு தயாரானது. இரண்டாவது வாரத்திற்கான கேப்டனை தேர்வு செய்யும் டாஸ்க் நடத்தப்பட்டு, சரவண விக்ரம் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து யார் யார் இரண்டாவது வாரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதை கேப்டன் தேர்தெடுக்க வேண்டும் என கூறப்பட்டது. இதற்காக கேப்டனுக்கு ஒரு டாஸ்க்கும் நடத்தப்பட்டது. இதில் சோம்பேறி, தொட்டால் சினிங்கி, சுவாரஸ்யமானவர், ரம்பம், சோர்வானவர், சுயபுத்தி இல்லாதவர் என 6 நபர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறப்பட்டது. 10 வினாடிக்குள் சரியான நபரை தேர்ந்தெடுக்கவில்லை என்றால், மேலும் ஒரு நபர் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் கேப்டனால் அனுப்பப்பட வேண்டும். இந்த வரிசையில் பவா செல்லதுரை, கூல் சுரேஷ், விஜய் வர்மா, மாயா, விஷ்ணு, ஐஷு மற்றும் பிரதீப் ஆண்டனி ஆகிய 7 போட்டியாளர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பவா செல்லதுரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர்.

BIGGBOSS: இது நிஜ சண்டை இல்லை; பரபரப்பை கிளப்பிய கமல்ஹாசன்; ஆரம்பிக்கலாங்களா?

இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. இதனிடையே பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது வாரத்திற்கு விஷ்ணு, மாயா, பிரதீப், அக்‌ஷயா, விச்சித்ரா, ஜோவிகா மற்றும் பூர்ணிமா ரவி ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றனர். முன்னரே பவா செல்லதுரை வீட்டில் இருந்து வெளியேறியதால் இந்தவாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. எனினும் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்ட 6 பேர் ஒரு குழுவாக செயல்பட தொடங்கினர். இந்த வாரம் உணவை அடிப்படையாக வைத்து பல பிரச்னைகள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறியது.

உணவில் காரம் அதிகம் என்பதில் தொடங்கி வேலை பளு அதிகம், தனி தனியா உணவு செய்து தர முடியாது போன்ற பல பிரச்னைகள் அரங்கேறியது. இது ஒரு கட்டத்தில் பெரிதாகி ஸ்மால் பாஸ் வீட்டார் திடீரென Strike செய்தனர். பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு உணவு சமைத்து தர முடியாது, நாங்கள் 6 பேர்தான் உள்ளோம் இன்னொருவர் வர வேண்டும் என்று ஸ்மால் பாஸ் வீட்டார் தரப்பில் கூறப்பட்டது. நிலைமையை சமாளிக்க முடியாமல் தவித்த கேப்டன் சரணவன் இறுதியாக தானே வந்து உதவுவதாக கூறி Strikeக்கு முற்றுப்புள்ளி வைத்தார். எனினும் சமைப்பதற்கு பிரச்னை செய்த ஸ்மால் பாஸ் வீட்டாரை தொகுப்பாளர் கமல் கண்டிப்பார் என்று ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

BIGGBOSS: இது நிஜ சண்டை இல்லை; பரபரப்பை கிளப்பிய கமல்ஹாசன்; ஆரம்பிக்கலாங்களா?

வார இறுதி நாளான நேற்று போட்டியாளர்களுடன் கலந்துரையாடிய நடிகர் கமல், ஸ்மால் பாஸ் வீட்டார் செய்த 'புரட்சி போராட்டம்' பற்றி பேசி இருந்தார். அதில், ஸ்மால் பாஸ் வீட்டார் தரப்பில் 7 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 6 பேர்தான் இருந்தோம், எங்கள் யாருக்கும் பெரிய அளவில் சமைக்க தெரியாது, ஆனால் வேண்டுமென்றே உணவை மோசமாக சமைப்பதாக குற்றம் சாட்டினர் போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்த பிரச்னை பற்றி பிக்பாஸ் வீட்டாரிடம் தொகுப்பாளர் கமல் கேட்ட பொழுது Strike பற்றி முன்னரே தெரிவித்திருக்கலாம், தண்ணீர் கூட தரவில்லை என்று கூறப்பட்டது. ரூல்ஸ் என்ற வார்த்தை இந்த முறை வீட்டினுள் அதிகமாக பயன்பாட்டில் இருந்ததால் அதையே ஆயுதமாக எடுத்த தொகுப்பாளர் ரூல்ஸ் படி ஸ்மால் பாஸ் வீட்டார் சமைத்து தர வேண்டும், முடியாது என்று சொல்லும் அளவிற்கு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள் என்று பிக்பாஸ் வீட்டாரிடம் கேள்வி எழுப்பினர்.

அத்துடன் முன்னறிவிப்பு இன்றி Strike செய்யக்கூடாது, அது அனைவரையும் பெரிய அளவில் பாதிக்கும் என்றும் எடுத்துரைத்தார். மேலும் Strike செய்ததற்கான உண்மை காரணத்தை ஸ்மால் பாஸ் வீட்டாரிடம் கேட்ட கமல், Content-காக அவ்வாறு செய்தோம் என்று ஒப்பு கொள்ளும்படியும் கூறியது அனைவரையும் சற்று நேரம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும் ஸ்மால் பாஸ் வீட்டாரும் Content காகத்தான் அவ்வாறு செய்தோம் என்று ஒப்புக்கொண்டனர்.

BIGGBOSS: இது நிஜ சண்டை இல்லை; பரபரப்பை கிளப்பிய கமல்ஹாசன்; ஆரம்பிக்கலாங்களா?

மேலும் பிக்பாஸ் வீட்டில் 3 வது வாரம் யார் கேப்டனாக இருப்பார் என்று தேர்வு செய்வதற்கான டாஸ்க் நடத்தப்பட்டது. யுகேந்திரன், ஜோவிகா மற்றும் ஐஷு ஆகியோரிடையே நடைபெற்ற இந்த டாஸ்கில், யுகேந்திரன் வெற்றி பெற்று 3வது வாரத்திற்கான கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இனி வரும் நாட்களில் பிக்பாஸ் வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும் என்பதே ரசிகர்களின் பார்வையாக இருந்து வருகிறது. அதிலும், ஸ்மால் பாஸ் வீட்டார் Strike செய்தது Content காகத்தான், 'இது நிஜ சண்டை இல்லை, இனிமேல்தான் நிஜ சண்டை வரும்' என்று தொகுப்பாளர் கமல்ஹாசன் கூறி உள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

- சீ.ரம்யா

banner

Related Stories

Related Stories