கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பிரியாமணி மலையாள படங்கள் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு இந்தி என நான்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 2004ம் ஆண்டு 'கண்களால் கைது செய்' படத்தில் அறிமுகமானார்.
அதன் பிறகு அது 'ஒரு கனாக்காலம்', 'மது' ஆகிய படங்களில் நடித்து இருந்தாலும் 2007ம் ஆண்டு வெளிவந்த பருத்திவீரன் படம் தான் நடிகை பிரியாமணிக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. அதோடு சிறந்த நடிகைக்கான தேசிய விருததையும் இந்தப் படம் இவருக்கு வாங்கி கொடுத்தது.
2017ம் ஆண்டு முஸ்தப்பா ராஜ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் நான்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி 1000 கோடிக்கு வசூல் குவிந்த ஜவான் படத்திலும் பிரியாமணி நடித்துள்ளார்.
இந்நிலையில், பெண்களின் வயது மற்றும் உருவத்தை கேலி செய்பவர்களுக்கு நடிகை பிரியாமணி பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "40 வயது அடைந்தாலும் ஆண்களை யாரும் அங்கிள் என்று அழைப்பதில்லை. ஆனால் பெண் 40 வயதைக் கடந்துவிட்டால் அவரை ஆன்ட்டி என்று கிண்டல் செய்கிறார்கள். இந்த வயது மற்றும் உருவ கேலி குறித்து நான் கவலைப்படப் போவதில்லை.
இப்போது கேலி செய்பவர்கள் 40 வயது காலகட்டத்து நிச்சயம் வரத்தான் போகிறார்கள். கருத்துச் சொல்கிற யாரோ ஒருவருக்குப் பதில் சொல்வதன் மூலம் முக்கியத்துவமும் ஒரு நிமிட புகழையும் கொடுக்க வேண்டியதில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்" என தெரிவித்துள்ளார்.