சினிமா

“அவருடன் என்னால் ஒருபோதும் அப்படி நடிக்க முடியாது..” -க்ரீத்தி ஷெட்டி குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி!

க்ரீத்தி ஷெட்டியுடன் ஜோடியாக நடிக்க மறுப்பு தெரிவித்ததற்கான காரணத்தை நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

“அவருடன் என்னால் ஒருபோதும் அப்படி நடிக்க முடியாது..” -க்ரீத்தி ஷெட்டி குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது கோலிவுட், டோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வருகிறார். அண்மையில் ஷாருக் நடிப்பில் வெளியான 'ஜவான்' படத்தின் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறார். இந்த சூழலில் இவர், தெலுங்கு நடிகை க்ரீத்தி ஷெட்டியுடன் ஜோடியாக நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ள காரணத்தை தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“அவருடன் என்னால் ஒருபோதும் அப்படி நடிக்க முடியாது..” -க்ரீத்தி ஷெட்டி குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி!

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் க்ரீத்தி ஷெட்டி. இவர் நடிப்பில் தெலுங்கில் 'உப்பெனா' படம் 2021-ல் வெளியானது. அதில் இவருக்கு தந்தையாக நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படம் தான் அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதில் தெலுங்கில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த படத்தில் நடித்தது மூலம் க்ரீத்தி ஷெட்டி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இந்த சமயத்தில்தான், விஜய் சேதுபதி தமிழில் 2021-ல் வெளியான 'லாபம்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டியை முதலில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அவர், நடிக்காமல் இதில் தன்ஷிகா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

“அவருடன் என்னால் ஒருபோதும் அப்படி நடிக்க முடியாது..” -க்ரீத்தி ஷெட்டி குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி!

இந்த நிலையில், அந்த படத்தில் க்ரீத்தி ஷெட்டியை கதாநாயகியாக தான் நடிக்க மாட்டேன் என்று விஜய் சேதுபதிதான் கூறியதாக அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தற்போது திரையுலகில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இதுகுறித்து அவர் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியது பின்வருமாறு :

“அவருடன் என்னால் ஒருபோதும் அப்படி நடிக்க முடியாது..” -க்ரீத்தி ஷெட்டி குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி!

"‘லாபம்' படத்தில் க்ரீத்தி ஷெட்டியை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என்று பட நிறுவனம் கூறியது. அதே நேரத்தில் தெலுங்கு படமான ‘உப்பெனா'வில் நான் அவருக்கு அப்பாவாக நடித்துக் கொண்டிருந்தேன். அப்பாவாக நடிக்கும்போது, என்னால் எப்படி அதே பெண்ணுடன் ரொமான்ஸ் செய்ய முடியும் எனக் கூறி, அதை மறுத்து விட்டேன். க்ரீத்திக்கு என் மகன் வயது இருக்கும்.

க்ரீத்தியை என் மகளாகதான் நான் பார்த்தேன். என்னால் எப்போதும் அவருடன் ரொமாண்டிக்காக நடிக்க முடியாது. அந்த படம் ஷூட்டிங் முடிந்த பிறகும், அவரிடம் 'நான் உனக்கு அப்பாபோல்தான்' என்று கூறிவிட்டு தான் வந்தேன்" என்றார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories