சினிமா

“நா ரெடி..” - செல்வராகவனுக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு த்ரிஷா சொன்ன பதில்.. என்ன சொல்லிருப்பாரு..!!

இயக்குநர் செல்வராகவனுக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை த்ரிஷா பதில் கூறியுள்ளது தற்போது திரை வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

“நா ரெடி..” - செல்வராகவனுக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு த்ரிஷா சொன்ன பதில்.. என்ன சொல்லிருப்பாரு..!!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர்தான் செல்வராகவன். இவரது இயக்கத்தில் தெலுங்கில் வெளியான முதல் திரைப்படம்தான் 'ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே' (Aadavari Matalaku Arthale Verule). இந்த படத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பெரிய ஹிட் கொடுத்த இந்த படம் 2007-ல் வெளியானது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டது. தனுஷ், நயன்தாரா நடிப்பில் 'யாரடி நீ மோகினி' என்ற பெயரில் 2008-ல் வெளியானது. மித்ரன் ஜவஹர் இயக்கிய இந்த படத்தில் எழுத்தாளராக செல்வராகவன் இருக்கிறார். தமிழில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பிடித்த படங்களில் ஒன்றாக இருக்கிறது.

“நா ரெடி..” - செல்வராகவனுக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு த்ரிஷா சொன்ன பதில்.. என்ன சொல்லிருப்பாரு..!!

இந்த படம் தெலுங்கில் நடித்த திரிஷா, வெங்கடேஷுக்கு மட்டுமல்லாமல் தமிழில் நடித்த தனுஷ், நயன்தாராவுக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த சூழலில் கடந்த 2013-ம் ஆண்டு செல்வராகவன் தான் இயக்கிய தெலுங்கில் வெளியான Aadavari Matalaku Arthale Verule படத்தை பார்த்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து தனது X வலைதள பக்கத்தில் "நீண்ட நாட்களுக்கு பின்னர் 'ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே' திரைப்படத்தை பார்த்தேன். வெங்கடேஷ் மற்றும் த்ரிஷாவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாகம் எடுக்க தயார்" என்று த்ரிஷாவை டேக் செய்து ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“நா ரெடி..” - செல்வராகவனுக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு த்ரிஷா சொன்ன பதில்.. என்ன சொல்லிருப்பாரு..!!

இந்த நிலையில் தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு இவரது பதிவுக்கு நடிகை த்ரிஷா பதில் அளித்துள்ளார். இதுகுறித்து திரிஷா வெளியிட்டுள்ள பதிவில் "நா ரெடி.." என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார் 10 ஆண்டுகளுக்கு பிறகு த்ரிஷா அளித்துள்ள பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories