சினிமா

“ஐயா.. இதுவரை ‘இந்தியா’ உங்களுக்கு பெருமை தரலயா?” - கிரிக்கெட் வீரர் சேவாக்கிற்கு விஷ்ணு விஷால் கேள்வி !

“இதுவரை 'இந்தியா' என்ற பெயர் உங்களுக்கு பெருமை அளிக்கவில்லையா” என்று கிரிக்கெட் வீரர் சேவாக்கிற்கு நடிகர் விஷ்ணு விஷால் கேள்வியெழுப்பியுள்ளார்.

“ஐயா.. இதுவரை ‘இந்தியா’ உங்களுக்கு பெருமை தரலயா?” - கிரிக்கெட் வீரர் சேவாக்கிற்கு விஷ்ணு விஷால் கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக கடந்த ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பது என அனைத்து கட்சித் தலைவர்களும் பேசியுள்ளனர்.

இதையடுத்து பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு கூட்டணிக்கு ‘I-N-D-I-A’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

“ஐயா.. இதுவரை ‘இந்தியா’ உங்களுக்கு பெருமை தரலயா?” - கிரிக்கெட் வீரர் சேவாக்கிற்கு விஷ்ணு விஷால் கேள்வி !

அதனைத் தொடர்ந்து ’இந்தியா’ என்ற பெயரை கேட்டாலே பாஜக தலைவர்கள் அலறி வருகின்றனர். முதன் முறையாக அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா, தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள INDIA என்ற பயோவை 'பாரத்' என்று மாற்றி "ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு இந்தியா என்று பெயரிட்டனர். காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட நாம் பாடுபட வேண்டும். நமது முன்னோர்கள் பாரதத்திற்காக போராடினார்கள், நாம் தொடர்ந்து பாரதத்திற்காக உழைப்போம். இது 'பாரதம்'. மோடி பாரதத்திற்கான பிரதமர்" என்று கூறினார்.

அதன் பின்னர் மோடி தீவிரவாத இயக்கங்களின் பெயரில் கூட இந்தியா இருக்கிறது என பயத்தில் கூறியிருந்தார். அதோடு நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக மாநிலங்களவை உறுப்பினர் நரேஷ் பன்சால் "இந்தியா என்பது பிரிட்டிஷ் காலனியாத்த ஆட்சியாளர்களால் வைக்கப்பட்ட பெயர். நாட்டின் உண்மையான பழமையான பெயர் பாரத் என்பதுதான். பாரத் என்ற பெயரை இந்தியா என பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மாற்றினார்கள். இந்தியா என்ற பெயர் அடிமைத்தனத்தின் குறியீடாக உள்ளது. அரசியலமைப்பில் இருந்தே அதை நீக்கம் செய்ய வேண்டும். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்யவேண்டும்"என்று கூறினார்.

“ஐயா.. இதுவரை ‘இந்தியா’ உங்களுக்கு பெருமை தரலயா?” - கிரிக்கெட் வீரர் சேவாக்கிற்கு விஷ்ணு விஷால் கேள்வி !

தொடர்ந்து இந்தியா என்ற பெயரை கண்டு பாஜகவினர் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதன் எதிரொலியாகத்தான் இந்தியா என்ற பெயரை மாற்றி பாரதம் என வைக்க வேண்டும் என்று பாஜக கும்பல் வலியுறுத்தி வருகிறது. மேலும் இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பினாலும், பாஜக ஆதரவாளர்கள் பாரதம் என பெயர் மாற்ற வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

“ஐயா.. இதுவரை ‘இந்தியா’ உங்களுக்கு பெருமை தரலயா?” - கிரிக்கெட் வீரர் சேவாக்கிற்கு விஷ்ணு விஷால் கேள்வி !

அந்த வகையில் இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாங்கள் பாரதியர்கள், இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர். எங்கள் அசல் பெயரை 'பாரத்' அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலமாகிவிட்டது.

இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் பாரதத்தை நெஞ்சில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று BCCI செயலாளர் ஜெய்ஷா அவர்களுக்கு நான் கோரிக்கை வைக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இவரது பதிவுக்கு ஒரு கும்பல் ஆதரவு தெரிவித்தாலும், பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். பலரும் கிரிக்கெட் ஆங்கிலேயர் விளையாட்டு அதை ஏன் விளையாடுகிறீர்கள் என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

“ஐயா.. இதுவரை ‘இந்தியா’ உங்களுக்கு பெருமை தரலயா?” - கிரிக்கெட் வீரர் சேவாக்கிற்கு விஷ்ணு விஷால் கேள்வி !

இந்த நிலையில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால், சேவாக்கின் பதிவுக்கு பதில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இதுகுறித்து விஷ்ணு விஷால் வெளியிட்ட பதிவில், "மதிப்பிற்குரிய ஐயா.. இத்தனை வருடங்களில் 'இந்தியா' என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா??" என்று குறிப்பிட்டு கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னதாக ”இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் என்ன நடக்கப்போகிறது, எந்த பலனும் இல்லை. இந்தியா எப்போதும் பாரத நாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால் பொருளாதார எந்த விதத்தில் உயரப்போகிறது?” என்று கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories