சினிமா

தில் ராஜு வெளியிட்ட டீசர் விழாவில் நடிகைக்கு முத்தமிட்ட இயக்குநர்.. குவியும் கண்டனங்கள் !

பிரபல தெலுங்கு நடிகர், நிகழ்ச்சி மேடையில் வைத்து நடிகைக்கு முத்தமிட்டு வீடியோ வெளியாகி கண்டனங்கள் வலுத்து வருகிறது.

தில் ராஜு வெளியிட்ட டீசர் விழாவில் நடிகைக்கு முத்தமிட்ட இயக்குநர்.. குவியும் கண்டனங்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாலிவுட்டில் பிரபலமாக இருப்பவர்தான் நடிகை மன்னரா சோப்ரா (Mannara Chopra). அரியானாவை சேர்ந்த இவர், முதலில் மாடல் துறையில் இருந்து பின்னர் நடிகையாக மாறினார். பிரியங்கா சோப்ராவின் உறவினரான இவர், 2014-ல் ’Prema Geema Jantha Nai’ என்ற தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமானார்.

தில் ராஜு வெளியிட்ட டீசர் விழாவில் நடிகைக்கு முத்தமிட்ட இயக்குநர்.. குவியும் கண்டனங்கள் !

அதன்பிரகு ‘Zid’ என்ற இந்தி படத்தில் நடித்த இவர், 2015-ல் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘சண்டாமிருதம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தன் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு விமல், சமுத்திரக்கனி நடிப்பில் 2015-ல் வெளியான ‘காவல்’ படத்தில் இடம்பெற்ற சிறப்பு பாடல் ஒன்றில் இவர் தோன்றியிருந்தார்.

தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், மாடலிங் துறையிலேயே கவனம் செலுத்தி வருகிறார். இந்த சூழலில் இவருக்கு பொதுமேடையில் வைத்து இயக்குநர் ஒருவர் முத்தமிட்ட சம்பவம் தற்போது திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தில் ராஜு வெளியிட்ட டீசர் விழாவில் நடிகைக்கு முத்தமிட்ட இயக்குநர்.. குவியும் கண்டனங்கள் !

தெலுங்கில் பிரபல இயக்குநர் ஏ.எஸ். ரவிகுமார் சவுத்ரி, தற்போது ராஜ் தருண் என்பவரை வைத்து 'திரகபாதர சாமி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் ராஜ் தருணுக்கு ஜோடியாக மன்னரா சோப்ரா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில், இதன் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

தில் ராஜு வெளியிட்ட டீசர் விழாவில் நடிகைக்கு முத்தமிட்ட இயக்குநர்.. குவியும் கண்டனங்கள் !

இதில் இந்த படத்தின் இயக்குநர், நடிகை மன்னரா சோப்ரா உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். டீசரை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட்டார் தொடர்ந்து அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த சமயத்தில் இயக்குநர் ரவிகுமார் அருகே நின்று கொண்டிருந்த நடிகை மன்னரா தோள் மேல், இவர் கைபோட்டு போஸ் கொடுக்க, அப்போது சட்டென்று அனைவர் முன்னே நடிகையின் கன்னத்தில் பட்டென்று முத்தமிட்டார் இயக்குநர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை, சிரித்து கொண்டே போஸ் கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கண்டனங்களை எழுப்பியுள்ளது. மேலும் இயக்குநருக்கும் கண்டங்கள் வலுத்து வருகிறது. இந்த சம்பவத்தால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories