சினிமா

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு.. Friends, காவலன் பட இயக்குநர் சித்திக் கவலைக்கிடம்.. ரசிகர்கள் அதிர்ச்சி !

பிரபல மலையாள இயக்குநர் சித்திக் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு.. Friends, காவலன் பட இயக்குநர் சித்திக் கவலைக்கிடம்.. ரசிகர்கள் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மலையாளத்தில் பிரபல இயக்குநராக அறியப்படுபவர் சித்திக். கடந்த 1989-ல் மலையாளத்தில் வெளியான 'Ramji Rao Speaking’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சித்திக். அதன்பிறகு தொடர்ந்து மலையாளத்தில் படங்களை இயக்கி வந்தார். இதையடுத்து தமிழில் 2001-ம் ஆண்டு வெளியான ‘Friends’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் பெரிய ஹிட் கொடுத்தது. இவரத் முதல் படம் ஹிட் கொடுத்த நிலையில், விஜய் காந்தை வைத்து ‘எங்கள் அண்ணா’, ‘சாது மிரண்டா’, ‘காவலன், ஆகிய படங்களை இயக்கினார். இருப்பினும் இவர் மலையாலத்திலே பிரதான படங்களை இயக்கினார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு.. Friends, காவலன் பட இயக்குநர் சித்திக் கவலைக்கிடம்.. ரசிகர்கள் அதிர்ச்சி !

இறுதியாக தமிழில் 2018-ல் அரவிந்த் சாமி, அமலாபால் நடிப்பில் வெளியான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தை இயக்கினார். பின்னர் மலையாளத்தில் 2020-ல் மோகன்லால் நடிப்பில் வெளியான 'பிக் பிரதர்' படத்தை இயக்கினார். தற்போது சினிமாவில் இருந்து சற்று ஓய்வில் இருக்கும் இவருக்கு அண்மைக்காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு.. Friends, காவலன் பட இயக்குநர் சித்திக் கவலைக்கிடம்.. ரசிகர்கள் அதிர்ச்சி !

எனவே மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இவருக்கு கல்லீரல் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. பின்னர் இதற்காக இவர் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த சூழலில் நேற்று இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர் அவசரவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் சித்திக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் இன்னும் சரியாகவில்லை என்றும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த செய்தி வெளியானதையடுத்து ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் ஆறுதலும், குணமடைய பிரார்த்தனையும் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories