சினிமா

இஸ்லாமியர் குறித்து அவதூறு: “கண்ட கழிசடைகளும் பேசுகிறார்கள்” - ராஜ் கிரண் ஆவேசம்.. தாக்கப்பட்டாரா சீமான்?

இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியவருக்கு எதிராக நடிகர் ராஜ்கிரண் ஆவேசமான பதிவு ஒன்றை வெள்ளியிட்டுள்ளார்.

இஸ்லாமியர் குறித்து அவதூறு: “கண்ட கழிசடைகளும் பேசுகிறார்கள்” - ராஜ் கிரண் ஆவேசம்.. தாக்கப்பட்டாரா சீமான்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் ராஜ்கிரண். 80's, 90's களில் இருந்து தற்போது வரை திரையுலகில் நீடித்து வரும் இவர், குணசித்திர கதாபாத்திரங்களில் தற்போது நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான விருமன், பட்டத்து அரசன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமூக கருத்துகளையும் அவ்வப்போது பேசி வரும் இவர், தற்போது இசுலாமியர்களுக்கு எதிராக பேசும் கும்பலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர் குறித்து அவதூறு: “கண்ட கழிசடைகளும் பேசுகிறார்கள்” - ராஜ் கிரண் ஆவேசம்.. தாக்கப்பட்டாரா சீமான்?

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், "இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும்

செய்து கொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ, அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல.. இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.

இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால் பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்.. இந்தப்பொறுமையை தவறாகப்புரிந்து கொண்டு கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்." என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர் குறித்து அவதூறு: “கண்ட கழிசடைகளும் பேசுகிறார்கள்” - ராஜ் கிரண் ஆவேசம்.. தாக்கப்பட்டாரா சீமான்?

இந்த நிலையில் ராஜ் கிரண் சீமானை தான் சாடியதாக இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மணிப்பூர் கலவரம், பழங்குடியின பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான ஆகியவற்றிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இஸ்லாமியர்கள் குறித்தும், கிறிஸ்துவர்கள் குறித்து அவதூறாக பேசினார். மேலும் அவர்கள் தேவனின் பிள்ளைகள் இல்லை என்றும், சாத்தானின் பிள்ளைகள் என்றும் வாய்க்கு வந்தபடியெல்லாம் வசைபாடினார். சீமானின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இஸ்லாமியர் குறித்து அவதூறு: “கண்ட கழிசடைகளும் பேசுகிறார்கள்” - ராஜ் கிரண் ஆவேசம்.. தாக்கப்பட்டாரா சீமான்?

அதோடு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவும் சீமானின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், "சாத்தானின் பிள்ளைகள் என்ற கடுமையான,அருவருப்பான வார்த்தையை கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்களுக்கும் எதிராக பயன்படுத்தி உள்ள சீமான் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.

முன்பு தாய் மதத்திற்கு திரும்புங்கள் என சங்கப்பரிவார் தொண்டர் போல் பேசியவர் சீமான். தற்போதைய அவரது சிறுபான்மை வெறுப்பு பரப்புரை மூலம் தன்னை வெளிப்படையாகவே அம்பலப்படுத்தி கொண்டுள்ளார். இத்தகைய வேடதாரிகளிடம் தமிழக மக்கள் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பெயரை குறிப்பிடாமல் நடிகர் ராஜ்கிரண் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது சீமானை மறைமுகமாக சாடியுள்ளதாக இணையவாசிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories