தமிழ்நாடு

'ஊருக்குதான் உபதேசம்'.. இணையத்தில் வைரலாகும் பா.ஜ.க நிர்வாகி மது குடிக்கும் அதிர்ச்சி வீடியோ!

பா.ஜ.க மாவட்ட செயலாளர் மது குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'ஊருக்குதான் உபதேசம்'.. இணையத்தில் வைரலாகும் பா.ஜ.க நிர்வாகி மது குடிக்கும் அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க பொதுச் செயலாளராக இருப்பவர் எஸ்.சுப்பையா. நங்கநல்லூரில் உணவகம் ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த உணவகத்தில் சுப்பையா தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை திட்டமிட்டு பரப்பியதாக அதே மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க ஐ.டி பிரிவு செயலாளர் ராஜேஷ் என்பவரது வீட்டிற்கு சுப்பையா மற்றும் மண்டல தலைவர் ஜவகர், ஆம்டஸ்டாங், சுப்பையாவின் சகோதரி மகன் முத்தரசன் ஆகியோர் சென்றுள்ளனர்.

'ஊருக்குதான் உபதேசம்'.. இணையத்தில் வைரலாகும் பா.ஜ.க நிர்வாகி மது குடிக்கும் அதிர்ச்சி வீடியோ!

அங்கு வந்த இவர்கள், 'தனது பெயரை களங்கப்படித்தி விட்டாய்' என கூறி ராஜேஷ் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ராஜேஷ் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட ராஜேஷ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பொது வெளியில் மது ஒழிப்பு குறித்து பேசிவிட்டு பா.ஜ.க மாவட்ட பொதுச் செயலாளர் மது குடிக்கும் வீடியோ பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories