சினிமா

KALKI 2898 AD: “அது என்னன்னே தெரியாது” - Glimpse வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாததற்கு அமிதாப் விளக்கம்

KALKI 2898 AD கிளிம்ஸ் வீடியோ வெளியீட்டின்போது தான் நேரடியாக கலந்து கொள்ளாதது குறித்து நடிகர் அமிதாப் விளக்கம் அளித்துள்ளார்.

KALKI 2898 AD: “அது என்னன்னே தெரியாது” - Glimpse வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாததற்கு அமிதாப் விளக்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் 'Project K'. நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு 'கல்கி 2898 AD' (Kalki 2898 AD). சுமார் 600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் கமல் ஹாசன், அமிதாப் பச்சான், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். Science Fiction படமாக உருவாகும் இந்த படத்தில் கமல் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

KALKI 2898 AD: “அது என்னன்னே தெரியாது” - Glimpse வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாததற்கு அமிதாப் விளக்கம்

இந்த படத்தின் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில், இதன் கிளிம்ப்ஸ் வீடியோ கலிபோர்னியா சான் டியாகோவில் நடைபெற்ற 'San Diego Comic-Con International' நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

KALKI 2898 AD: “அது என்னன்னே தெரியாது” - Glimpse வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாததற்கு அமிதாப் விளக்கம்

இந்த நிகழ்ச்சியில் ராணா, கமல், நாக் அஸ்வின், பிரபாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில், அமிதாப் பச்சான் கலந்துகொள்ளவில்லை. மாறாக அவர் வீடியோ கால் மூலம் கலந்துகொண்டார். அமிதாப் ஏன் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று ரசிகர்கள் தரப்பில் இருந்து பல்வேறு கேள்விகள் எழுப்பி வந்தனர்.

KALKI 2898 AD: “அது என்னன்னே தெரியாது” - Glimpse வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாததற்கு அமிதாப் விளக்கம்

இந்த நிலையில் தான் அந்த விழாவில் நேரடியாக ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து அமிதாபே விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "San Diego Comic Con (SDCC)-ல் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இயக்குநர் நாக் அஸ்வின் அழைப்பு விடுத்தார். ஆனால் எனக்கு Comic Con குறித்த விஷயங்கள் எதுவும் தெரியாது. எனது மகன் அபிஷேக்கிடம் கேட்டபோது அது என்ன என்று கூறினார்.

மேலும் நான் அந்த நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்ளாததற்கு காரணம் எனது வேலை பளு மற்றும் மருத்துவ கட்டுப்பாடு. இந்த காரணத்தால் என்னால் நேரடியாக கலந்துகொள்ள முடியவில்லை. அதனாலே நான் வீடியோ கால் மூலம் கலந்து கொண்டு பேசினேன்." என்றார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் அமிதாப் வீடியோ கால் மூலம் பேசுகையில், கமலின் நடிப்பு குறித்து பாராட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories