சினிமா

1500 படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடனம்.. உடல் உறுப்புகள் எல்லாம் செயலிழப்பு: பிரபல நடன இயக்குநர் மரணம்

பிரபல நடன இயக்குநர் ராகேஷ் மாஸ்டர், உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளது தெலுங்கு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1500 படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடனம்.. உடல் உறுப்புகள் எல்லாம் செயலிழப்பு: பிரபல நடன இயக்குநர் மரணம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆந்திர மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் பிரபல திரைப்பட நடன இயக்குநர் ராகேஷ். 53 வயதாகும் இவரது உண்மையான பெயர் ராமா ராவ். தெலுங்கில் பிரபல நடன இயக்குநர்களில் இவரும் ஒருவர் ஆவார். 'Aata' and 'Dhee' என்ற ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான இவரை தெலுங்கு சினிமா மேலே கொண்டு சென்றது.

1500 படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடனம்.. உடல் உறுப்புகள் எல்லாம் செயலிழப்பு: பிரபல நடன இயக்குநர் மரணம்

பிரபல தெலுங்கு முன்னணி நடிகர்களான வெங்கடேஷ், நாகார்ஜுனா, மகேஷ் பாபு, ராம்பாபு, பிரபாஸ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 1500 பாடல்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து சினிமாவில் நடன இயக்குநராக இருந்து வந்த இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

1500 படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடனம்.. உடல் உறுப்புகள் எல்லாம் செயலிழப்பு: பிரபல நடன இயக்குநர் மரணம்

இந்த சூழலில் கடந்த வாரம் ஷூட்டிங்கிற்காக விசாகப்பட்டினம் மற்றும் பீமாவரம் சென்றிருந்தார். அங்கே இவருக்கு திடீரென உடல்நிலை மோசமானது. இதையடுத்து மருத்துவமனையில் அவரை அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

அவரது உயிரிழப்பு காரணம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருத்த அவருக்கு கடுமையான வளர்சிதை மாற்ற அமிலத்தன்மை காரணமாக பல உறுப்பு செயலிழந்துள்ளது. இதனாலே அவர் உயிரிழந்ததாக மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories