சினிமா

திரையரங்கில் வெளியாகி OTT-க்காக காத்திருக்கும் படங்கள்.. இன்றும், நாளையும் வெளியாகவுள்ள வரவுகள் என்னென்ன?

இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

திரையரங்கில் வெளியாகி OTT-க்காக காத்திருக்கும் படங்கள்.. இன்றும், நாளையும் வெளியாகவுள்ள வரவுகள் என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள காலகட்டத்தில் பல்வேறு மொழிப்படங்களையும் மக்கள் ரசிக்கிறார்கள். உலகம் முழுக்க நாள்தோறும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மொழியிலும் குறைந்தது ஒரு படமாவது வெளியாகும். அந்த வகையில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒரு திரைப்படம் வெளியானால், கூடவே இன்னும் ஒரு படமாவது வெளியாகும்.

அந்த வகையில் தற்போது திரையரங்கில் வெளியாகி OTT தளத்தில் வரவுள்ள படங்கள் பட்டியல் இதோ :

திரையரங்கில் வெளியாகி OTT-க்காக காத்திருக்கும் படங்கள்.. இன்றும், நாளையும் வெளியாகவுள்ள வரவுகள் என்னென்ன?

>> ஃபர்ஹானா (Farhana)

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் கடந்த மே 12-ம் தேதி வெளியாகியது. இது ஜூன் 16-ம் தேதி (இன்று) Sony LIV's ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

திரையரங்கில் வெளியாகி OTT-க்காக காத்திருக்கும் படங்கள்.. இன்றும், நாளையும் வெளியாகவுள்ள வரவுகள் என்னென்ன?

>> இராவண கோட்டம் (Raavana Kottam)

'மதயானைக் கூட்டம்' படம் மூலம் பெரிய பெயர் பெற்ற இயக்குநர் விக்ரம் சுகுமாரன், இயக்கத்தில் வெளியான படம்தான் ‘இராவண கோட்டம்’. சாந்தனு பாக்யராஜ், கயல் ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் கடந்த மே 12-ம் தேதி வெளியாகியது. தற்போது இந்த படம் Amazon Prime Video ஓடிடி தளத்தில் ஜூன் 16-ம் தேதி (இன்று) வெளியாகவுள்ளது.

திரையரங்கில் வெளியாகி OTT-க்காக காத்திருக்கும் படங்கள்.. இன்றும், நாளையும் வெளியாகவுள்ள வரவுகள் என்னென்ன?

>> தமிழரசன் (Tamilarasan) :

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி வெளியானது. இந்த படம் Zee5 ஓடிடி தளத்தில் ஜூன் 16-ம் தேதி (இன்று) வெளியாகவுள்ளது.

திரையரங்கில் வெளியாகி OTT-க்காக காத்திருக்கும் படங்கள்.. இன்றும், நாளையும் வெளியாகவுள்ள வரவுகள் என்னென்ன?

>> பிச்சைக்காரன் 2 (Pichaikkaran 2) :

விஜய் ஆண்டனி இயக்கத்தில் அவர் நடிப்பில் கடந்த மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் பிச்சைக்காரன் 2. இந்த படத்தில் காவ்யா தப்பர், யோகி பாபு, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூன் 17-ம் தேதி (நாளை) Disney+ Hotstar ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

banner

Related Stories

Related Stories